ஶ்ரீநவதுர்கா ஹோமம் ஶ்ரீநவதுர்கா ஹோமம்
நவராத்திரி நாயகியராம் ஒன்பது துர்கைகளைப் போற்றும் அபூர்வ வழிபாடு, நவதுர்கா ஹோமம். மதுராந்தகத்திலிருந்து கூவத் தூர் செல்லும் சாலையில், சுமார் 17 கி.மீ. அமைந்துள்ள கிராமம் பெரியவெளிக்காடு. இங்குள்ள அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயிலில் (நடப்புச் சூழலில் உரிய விதிகளைப் பின்பற்றி) நடைபெறும் நவதுர்கா ஹோமத்தில், வாசகர்கள் தங்களின் நலன் வேண்டியும், பிள்ளைகள், உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்காகவும் வேண்டி சங்கல்பித்து பலன் பெறலாம்.
அன்பார்ந்த வாசகர்களே!
நவராத்திரி ஒன்பது நாள்களிலும் போற்றப்படும் சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்த மாதா, காத்யாயனி, காளராத்ரி, மகா கௌரி, சித்திதாத்ரி ஆகிய நவ துர்கைகளுக்கும் மிகவும் ப்ரீதியானது நவதுர்கா ஹோமம்.
சக்தி விகடன் மற்றும் அருள்மிகு வெக்காளி அம்மன் சித்தர் பீடத்தின் சார்பில், அமாவாசைப் புண்ணிய தினமான 16.10.2020 வெள்ளிக்கிழமை அன்று நிகழவுள்ளது நவதுர்கா ஹோமம். ஒவ்வொரு துர்கைக்கும் ஒரு கலசம் வைத்து, துர்கா சூக்தம் ஜபம் மற்றும் ஹோமம் செய்யப்பட்டு, பூர்ணாஹுதி நடைபெறும். பின்னர் கலசங்கள் பிரதட்சிணமாக எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறும்.
கல்யாண வரம், மாங்கல்ய பலம், குழந்தைப் பேறு, வேலை வாய்ப்பு, உத்தியோக உயர்வு, தொழில் அபிவிருத்தி, நோயற்ற வாழ்வு, கடன் பிரச்னைக்குத் தீர்வு, சத்ரு ஜயம் ஆகிய ஒப்பற்ற ஒன்பது பலன்களை அருளும் அற்புத வழிபாடு, இந்த ஹோமம்.
-
முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.301/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்), பெரியவெளிக்காடு அருள்மிகு வெக்காளி அம்மன் சந்நிதியில் விசேஷமாய்ப் பூஜிக்கப்பட்ட - அம்மன் டாலருடன் கூடிய காப்பு ரட்சை ஆகியவை ஒரு வார காலத்துக்குள் அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆக, நேரில் தரிசிக்க இயலாத நிலையில்..வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் (19.10.20 திங்கள் அன்று) வீடியோ வடிவில் சக்தி விகடன் Youtube சேனல் மற்றும் முகநூல் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். அக்டோபர் 15, மாலை 6 மணிக்கு பதிவு முடிவடைகிறது.