ஷீர்டி ஶ்ரீசாயி சத்யநாராயண பூஜை! சகல சுபிட்சங்களும் அருளும்
ஷீர்டி ஶ்ரீசாயிபாபாவுக்கு உகந்த தனித்துவம் மிக்க வழிபாடு ஷீர்டி ஶ்ரீசாயி சத்யநாராயண பூஜை. ஶ்ரீசாயிநாதர் தன் பொருட்டு பக்தர்கள் கடைப்பிடிக்க அனுமதித்த ஒரே வழிபாடு இது. ஶ்ரீசாயிபாபா உடலுடன் வாழ்ந்த காலத்திலேயே... ஶ்ரீதாஸ்கணு மகராஜ் பூஜா விதிமுறைகள் குறித்து வழிகாட்ட, பீமாஜிபாட்டில் என்ற பாபாவின் பக்தரால் முதன்முதலில் தொடங்கப்பட்ட இந்த வழிபாடு பல அற்புதமான பலன்களைத் தர வல்லது. நோய், கடன், பொருளாதாரப் பிரச்னைகள், வழக்குகள், வேலையின்மை, கல்யாணத் தடை, குழந்தைப் பேறு இல்லாமை முதலான சகல பிரச்னைகளும் தீர்ந்து சுபிட்சம் அடைய வரம் அருளும் அபூர்வ பூஜை இது.
திருமதி ரமா சுப்ரமணியன் துவாரகாமாயி ஆத்மஞானியர் மையம்
சக்தி விகடன் வாசகர்களுக்காக துவாரகாமாயி ஆத்மஞானியர் மையம் சார்பில், திருமதி ரமா சுப்ரமணியன் `ஷீர்டி ஶ்ரீசாயி சத்யநாராயண பூஜை’யை முன்னின்று வழிநடத்தித் தருகிறார். இவர் ஷீர்டி ஶ்ரீசாயிபாபாவை சத்குருவாக ஏற்று, பாபாவின் சேவையில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்.ஆன்மிக எழுத்தாளரும் சொற்பொழிவாளருமான திருமதி ரமா சுப்ரமணியன் தமிழ் இலக்கியம், கணினித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சத்குரு ஷீர்டி ஶ்ரீசாயிபாபாவின் குரு சரித்திரம், ஶ்ரீவீரபிரம்மேந்திர ஸ்வாமிகள் குருசரித்திரம் உள்ளிட்ட பல ஞான நூல்களை எழுதியுள்ளார். மகான்களின் வரலாற்றில் கரைந்து, அவர் களின் அருள்வழியில் இறைப்பணியைத் தொடர்கிறார்.
அன்பார்ந்த வாசகர்களே!
இந்தப் பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.250/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஷீர்டி ஶ்ரீசாயிசத்யநாராயணர் பூஜை - சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் நன்மைக்காக வழிபாட்டில் சிறப்புச் சங்கல் பமும் பிரார்த்தனையும் நடைபெறும்.
விஜய தசமித் திருநாளான 26.10.2020 திங்களன்று காலை 9:30 மணியளவில் வழிபாடு தொடங்கும். முன்பதிவு செய்துகொள்ளும் வாசகர்கள் வீடியோ (zoom meet) மூலம் வழிபாட்டை தரிசிக்கலாம். அதற்கான இணைப்பு முகவரி (zoom meet link) முதல் நாளே அதாவது 25.10.2020 ஞாயிறன்று மாலைக்குள் வாசகர்களுக்கு E-Mail மூலம் அனுப்பி வைக்கப்படும்.
முன்பதிவு செய்துகொள்ளும் வாசகர்கள், தரிசனத்துக்காக வீடியோ இணைப்பில் இணைவதோடு, அவரவர் வீட்டிலிருந்தபடி வழிபாடும் செய்யலாம். அங்ஙனம் வழிபட விரும்பும் வாசகர்கள், தங்கள் வீட்டில் பூஜைக்குத் தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் பொருள்களுடன் முன்னதாகத் தயாராகிக்கொள்ளவும்.
வாசகர்கள் அவரவர் வீட்டிலேயே வழிபட ஏதுவாக, சத்ய நாராயணர், ஷீர்டி சாயிபாபா வண்ணப்படங்களும் வழிபாட்டு முறைகள், சாயி அஷ்டோத்திர நாமாவளி உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பும் (Pdf வடிவில்) மின்னஞ்சல் மூலம் முன்னதாக (24.10.2020 அன்று) அனுப்பிவைக்கப்படும். அவற்றைத் தரவிறக்கம் செய்து பூஜைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அத்துடன், முன்பதிவு செய்யும் முதல் 300 வாசகர்களுக்கு ஷீர்டியில்
இருந்து விசேஷமாகப் பெறப்பட்ட புனிதம் மிக்க உதிப் பிரசாதம் 1.11.2020 தேதிக்குள் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
ஆண்ட்ராய்டு போனுக்கு...
https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN
-
ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307
-
ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...
நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.
-
"இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்" - ரொம்ப முக்கியம்!
வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாக தேர்ந்தெடுத்துக்-கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் -கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
உடை: செமி-ஃபார்மல் ப்ளீஸ்!
செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், சங்கல்பத்துக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.