சொ. வன்னியராஜன், பேராசிரியர் மற்றும் தலைவர், பயிர் இனப்பெருக்கவியல் துறை, வேளாண் அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.
சிறுதானிய இனப்பெருக்கவியல் நிபுணர். 2017-ல் மதுரை1 குதிரைவாலி ரகம் இவர் தலைமையில் நீண்ட ஆய்வுக்குபின் வெளியிடப்பட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆய்வுகள் பல்வேறு அறிவியல் நிதி நிறுவனங்களின் பங்களிப்போடு செய்துள்ளார். 25-க்கும் மேற்பட்ட மூதறிவியல் மாணவர்களின் ஆய்விற்கு வழிகாட்டியாக விளங்கியுள்ளார். 150-க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது சேவையைப் பாராட்டி பல்கலைக்கழகம் சிறந்த ஆசிரியர், ஆய்வாளர் என விருது வழங்கி கௌரவித்துள்ளது.
வெ. மீனாட்சி, முனைவர், உதவிப் பேராசிரியர் சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.
இவருடைய மூத்த அறிவியல் சிறந்த ஆய்வாகப் பல்கலைக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது. பல்வேறு ஆய்வுத் திட்டங்களில் இணை ஆய்வராக விளங்கி 104.00 லட்சம் பெருமான நிதியுதவியினை பல்கலைக்கழகத்திற்கு பெற்று தந்துள்ளார். 3 பன்னாட்டு தர புத்தக எண் கொண்ட அறிவியல் நூல்களில் அத்தியாயங்களை எழுதியுள்ளார். உழவன் உணவகம் தொடங்கியதில் இவரது பங்களிப்பினை மாவட்ட நிர்வாகம் பாராட்டி கௌரவித்துள்ளது.
மு. இளமாறன், மு. இளமாறன், உதவிப் பேராசிரியர் சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை
இவருடைய முனைவர் பட்ட ஆய்வானது சிறந்த ஆய்வாக பல்கலைக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது. பல்வேறு ஆய்வுத் திட்டங்களில் ஆய்வராக விளங்கி 50 லட்சம் பெருமான நிதியுதவியினை பல்கலைக்கழகத்திற்கு பெற்று தந்துள்ளார். 18 ஆய்வுக்கட்டுரைகளை அறிவியல் நூல்களில் எழுதியுள்ளார். சிறந்த இளம் ஆய்வாளராக 2014ஆம் ஆண்டு மாநில அரசு தேர்ந்தெடுத்து கவுரவித்தது. மேலும் பல்வேறு தேசிய சர்வதேச மற்றும் மாநில அளவிலான கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளார்.
வீ. வீரணன்அருண் கிரிதாரி, முனைவர்,உதவிப் பேராசிரியர் வேளாண்மை அறிவியல் நிலையம் தர்மபுரி.
உணவியல் & ஊட்டச்சத்து ஆசிரியராக பத்து ஆண்டுகளாக பணி செய்து வருகிறார். பத்துக்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார். 5 பன்னாட்டு தர புத்தக எண் கொண்ட அறிவியல் நூல்களை எழுதியுள்ளார். 10 இளமறிவியல் மாணவர்களின் ஆய்விற்கு வழிகாட்டியாக விளங்கியுள்ளார். பல்வேறு ஆய்வுத் திட்டங்களில் (60 லட்சம் பெருமான) இணை ஆய்வராக விளங்கியுள்ளார். நடுவண் அரசின் உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்தில் 10 லட்சம் நிதி உதவியினை பெற்று நூற்றுக்கும் மேலான வேளாண் பெருமக்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் சிறுதானிய, காய் கனிகளில் மதிப்புகூட்டிய பொருட்கள் தயார் செய்யும் தொழில் முனைவோராக மாற பயிற்சி அளித்துள்ளார்.
அன்பார்ந்த வாசகர்களே!
பசுமை விகடன், வேளாண் அறிவியல் நிலையம், தர்மபுரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும் சிறுதானியச் சாகுபடியும் மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பமும் என்ற ஆன்லைன் நிகழ்வில் பின்வரும் தலைப்புகளில் வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர்.
சிறுதானியச் சாகுபடிக்கான ரகங்களும் அதன் சாகுபடி முறையும்...
சிறுதானியத்தில் உடனடி தயார் (ரெடிமேட்)உணவுகள் தயார் செய்யும் முறைகள்...
பிழிதல் தொழிநுட்பம் மூலம் மதிப்பு கூட்டும் சிறுதானிய உணவுகள்...
அடுமனை தொழிநுட்பம் மூலம் மதிப்பு கூட்டிய சிறுதானிய உணவுகள்...
சிறுதானிய உணவுத் தொழில் சாதனை விவசாயியின் அனுபவங்கள்..
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
ஆண்ட்ராய்டு போனுக்கு...
https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.