ஶ்ரீமகாலிங்க சுவாமி திருக்கோயில் திருவிடை மருதூர்
கும்பகோணத்தில் இருந்து 9 கி.மி. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ளது திருவிடைமருதூர். இங்குதான் மகாலிங்க சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
அன்பார்ந்த வாசகர்களே!
திருவிடைமருதூர்... நம் முற்பிறவியின் பாவங்களையும் போக்கும் தலம். காசிக்கு நிகரான 6 தலங்களில் ஒன்று. ஏழு கோபுரங்கள், ஏழு பிராகாரங்கள், ஏழு கிணறுகள் 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் லிங்கங்கள், 12 ராசிகளைக் குறிக்கும் மகா மண்டபத் தூண்கள் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டது இந்த ஆலயம். இங்கு ப்ரணவப் பிராகாரத்தில் 'சாம்பவி தட்சிணாமூர்த்தி' என்ற திருவடிவில் மகா வரப்பிரசாதியாக எழுந்தருளியுள்ளார் இறைவன். சந்திரன் இங்குவந்து வழிபாடு செய்து தன் சாபம் நீங்கப் பெற்றான். இங்கு குருப்பெயர்ச்சி நாளில் சங்கல்பம் செய்துகொள்வதன் மூலம் சகல தோஷங்களும் நீங்கி குருவின் பரிப்பூரண அருள் கிடைக்கும். இந்த ஆண்டு வரும் நவம்பர் 15 ம் தேதி குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. இந்த குருப்பெயர்ச்சியால் மேஷம், கடகம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளுக்கு நற்பலன்களும் ரிஷப ராசிக்கு நன்மையும் மிதுனம், கன்னி, துலாம் ஆகிய ராசிகளுக்கு சில சவால்களையும் மகரம் கும்பம் ஆகிய ராசிகளுக்கு சமமான பலனகளையும் குருபகவான் வழங்க இருக்கிறார். அனைத்து ராசிக்காரர்களும் இந்தத் தலத்தில் சங்கல்பம் செய்துகொள்வது நல்லது. அவ்வகையில் இத்தலத்தில் வாசகர்களுக்காக விசேஷ சங்கல்ப பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளது சக்தி விகடன். கீழ்க்காணும் விவரங்களைப் பூர்த்தி செய்து நீங்களும் சங்கல்பிக்கலாம். சங்கல்பக் கட்டணம் எதுவுமில்லை.
உங்கள் பிள்ளைகள், உறவுகள், நண்பர்களுக்காக பிரார்த்தனைகளைச் சமர்ப்பிக்கலாம்.
குருவின் திருவருள் அனைவருக்கும் ஸித்திக்கட்டும்.