ஶ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயம், சப்தகிரி நகர், ஞானமேடு கிராமம், இடையார்பாளையம்.
பாண்டிச்சேரி - கடலூர் மார்க்கத்தில், இடையார்பாளையம் கிராமம் அருகில் ஞானமேடு கிராமத்தில் (சப்தகிரி நகர்) உள்ள அருள்மிகு ஶ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயம்.
அன்பார்ந்த வாசகர்களே!
வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிபகவான் தனுர் ராசியிலிருந்து மகரராசிக்கு வரும் 27.12.2020 அன்று அதிகாலை 5. 21 மணிக்குப் பெயர்ச்சி ஆகிறார். மகரம் , சனிபகவானின் சொந்தவீடு. அங்கே அவர் ஆட்சிபலம் பெற்று அமர்கிறார். ஏற்கெனவே மகரத்தில் நீச குரு அமர்ந்திருக்கிறார். சனிபகவான் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அங்கு அமர்ந்து பலன் தரப்போகிறார். கோசாரப்படி இந்தப் பெயர்ச்சியில் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளுக்கு உத்தமப் பலன்களை அருளப்போகிறார் சனி பகவான். மேஷம், கன்னி ஆகிய ராசிக்காரர்களுக்கு மத்திம பலன்கள் வாய்க்கும். மற்ற ராசிக்கார்ர்கள் பரிகார வழிபாடுகள் மூலம் நன்மைகள் அடையலாம்.
நிகழும் சனிப்பெயர்ச்சியையொட்டி வாசகர்கள் அனைவரும் நன்மை பெறவேண்டியும், அவர்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களில் கிரக தோஷங்கள் நீங்கி சகல சுபிட்சங்களும் கிடைக்கவேண்டி பிரமாண்டமான சனிப்பெயர்ச்சிப் பரிகார ஹோமம் நடைபெறவுள்ளது. சக்தி விகடனும் ஶ்ரீவிஜய விஸ்வமாதா ராஜராஜேஸ்வரி பீடமும் இணைந்து வழங்கும் இந்த ஹோமம், பாண்டிச்சேரி - கடலூர் மார்க்கத்தில், இடையார்பாளையம் கிராமம் அருகில் ஞானமேடு கிராமத்தில் (சப்தகிரி நகர்) உள்ள அருள்மிகு சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயத்தில் நடைபெறவுள்ளது, 27.12.2020 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள இந்த ஹோமத்தில் வாசகர்கள் சங்கல்பம் செய்து பயன் அடையலாம்.
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.250 மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்- 6.1.2021 தேதிக்குள்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவைப் பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆக, நேரில் தரிசிக்க இயலாத நிலையில் வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் விரைவில் வீடியோ வடிவில் சக்தி விகடன் Youtube சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். டிசம்பர் 26, 2020 மாலை 6 மணிக்கு பதிவு முடிவடைகிறது.