அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கத்தாரிகுப்பம், வேலூர் மாவட்டம்,
கத்தாரிகுப்பம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில். வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலுள்ளது கத்தாரிகுப்பம். பாடல் பெற்ற திருவல்லம் திருத்தலத்துக்கு அருகில் உள்ளது.
அன்பார்ந்த வாசகர்களே!
முக்கண்ணனின் அம்சமாகத் தோன்றிய ருத்திராட்சம் அற்புதமானப் பலன்களை அளிக்கவல்லது. சிவபெருமானுக்கு ருத்திராட்ச அபிஷேகம் செய்தால் மன நிம்மதி கிடைக் கும்; அனைத்துவகை கவலைகளும் நீங்கும் என்கின்றன ஆகமங்கள். அதேநேரம், ருத்திராட்ச அபிஷேகத்தை வீடுகளில் செய்யக் கூடாது; அற்புதமான அந்த வைபவத்தை ஆலயங் களுக்குச் சென்றுதான் செய்யவேண்டும் என்று அறிவுறுத்துகின்றன ஞானநூல்கள்.
கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணம், பிள்ளைப்பேறு முதலான சுப காரியங்களில் ஏற்பட்டிருக்கும் தடை களால் வருந்தித் தவிக்கும் அன்பர்கள், கடும் பிணிகளால் வருந்துவோர் ருத்திராட்ச அபிஷேகத்தை தரிசிப்பதும் அபிஷேக ருத்திராட்சத்தைப் பெற்று பூஜிப்பதும் சிறப்பு. குறிப்பாக தேவர்களின் வைகறைப்பொழுதான - வழிபாட்டுக்கு மிகவும் உகந்த மார்கழியில் சிவபிரானுக்கு ருத்திராட்ச அபிஷேகம் செய்வது மிகவும் விசேஷம். முன்பதிவு மூலம் மகா ருத்திராட்ச அபிஷேக வைபவத்துக்குச் சங்கல்பிக்கும் வாசகர்களுக்குச் சிவபிரசாதமாக, அபிஷேகித்து பூஜிக்கப்பட்ட ருத்திராட்சம் அனுப்பிவைக்கப்படும்.
வரும் 10.1.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:30 மணி முதல், வாசகர்களுக்கான பிரார்த்தனைகளைச் சமர்ப்பித்து உரிய சங்கல்பத்துடன் ஈசனுக்கு மகா ருத்திராட்ச அபிஷேக ஆராதனை நிகழவுள்ளது. கயிலாய வாத்தியக் கச்சேரியும், திருமுறைகள் முற்றோதலும் நடைபெறும்.
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த அபிஷேகத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.250 மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு பூஜிக்கப்பட்ட ருத்திராட்சம் - 25.1.2021 தேதிக்குள் அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவைப் பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி அபிஷேக வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆக, நேரில் தரிசிக்க இயலாத நிலையில் வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் விரைவில் வீடியோ வடிவில் சக்தி விகடன் Youtube சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.ஜனவரி 9, 2021 மதியம் 2.30 மணிக்கு பதிவு முடிவடைகிறது.