
மதுக்கூர் ராமலிங்கம் மூத்த பத்திரிகையாளர்
ஆற்றல்மிகு பேச்சாளர். அரசியல் மேடைகளில் காரசாரமாக... பட்டிமன்றம் மற்றும் இலக்கிய மேடைகளில் நகைச்சுவை ததும்ப பேசக்கூடியவர். மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் எனப் பன்முகத் திறமைகள் வாய்ந்தவர்.
அன்பார்ந்த வாசகர்களே!
தமிழ் மண்ணே வணக்கம்! உரக்கப் பேசுவோம்... உண்மையே பேசுவோம்...
இளைஞர்களே, இளைஞிகளே...
மாணவர்களே... மாணவிகளே!
நீங்கள் அரசியலில் ஆர்வம் மிகுந்தவரா...
சமூகநலனில் அக்கறை கொண்டவரா...
இலக்கிய மேடைகளில் கோலோச்ச விரும்புபவரா...
பொதுமேடைகளில் முழங்கத் துடிப்பவரா...
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று அசத்த நினைப்பவரா...
உங்களுக்குக் கைகொடுக்கத்தான்... இந்தத் தமிழ் மண்ணே வணக்கம்! உங்கள் பேச்சாற்றலை பட்டைத்தீட்டுவதன் மூலம் உங்கள் கனவுகளை நனவாக்க ஜூனியர் விகடன் மேடை அமைத்துக்கொடுக்கிறது. அரசியல், இலக்கியம், சமூகநலன், ஆன்மிகம் என்று பல்வேறு துறைகளிலும் சிறந்த பேச்சாளர்களாக விளங்கும் ஆளுமைகள், உங்களுக்குப் பயிற்சி அளித்து பட்டைத்தீட்டத் தயாராக இருக்கிறார்கள். ஆர்வமுள்ள இளைஞர்கள், காணொலி (ZOOM) வாயிலாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பயிற்சிபெறலாம்.
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
ஜூலை 3, 2021 மதியம் 12 மணிக்கு (இந்திய நேரம்) பதிவு நிறைவு பெறுகிறது.