
அருள்மிகு சிவாவிஷ்ணு திருக்கோயில், பூங்காநகர், திருவள்ளூர்,
திருவள்ளூர்-உத்துகோட்டை ஆர்.டி, ஹரிராம் நகர், பூங்கா நகர், கக்கலூர், தமிழ்நாடு 602003
அன்பார்ந்த வாசகர்களே!
சுதர்சன ஹோமம்!
ஹோமங்களில் மிகச் சிறப்பானது ஶ்ரீசுதர்சன ஹோமம். `ஞானம்- பலம்- ஐஸ்வர்யம்- வீர்யம் போன்றவற்றை அருள்பவராகிய ஶ்ரீ சுதர்சன மூர்த்தியை வணங்குகிறேன்’ என்று ஞானநூல்கள் சக்கரத் தாழ்வாரை வணங்கித் துதிக்கின்றன. ஶ்ரீ சுதர்சனரின் மூல மந்திரம், காயத்ரி மந்திரம் ஆகியவற்றைச் சொல்லிச் செய்யப்படும் இந்த அற்புத ஹோமத்தால் அபூர்வ பலன்களைப் பெறலாம்.
சுதர்சன ஹோம பலன்கள்!
உடலை வாட்டி வதைக்கும் பிணிகள் தரும் ஆபத்துகளிலிருந்து ஶ்ரீ சுதர்சன ஹோமம் காக்கும். மறைமுகமாகவும் நேரிடையாகவும் தொல்லைகள் அளிக்கும் பகைவர்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். ஆபத்து காலங்களில் சுதர்சனரின் அருள் கிடைக்கும். தீவினைகள் தீய சக்திகளின் பாதிப்புகளிலிருந்து நம்மையும் நம் இல்லத்தையும் காத்து நிற்கும் வல்லமை இந்த ஹோமத்துக்கு உண்டு.மேலும் எளிதில் கிரஹிக்கும் ஆற்றல் கிடைக்கும். மனநல பாதிப்புகள் மெள்ள குணமாகும், குருவை - சாதுக்களை அவமதித்த பாவம் நீங்கும்.
இத்தகு மகிமைமிகு மகா சுதர்சன ஹோம வைபவம் திருவள்ளூர்-பூங்காநகரில் அமைந்துள்ள அருள்மிகு சிவாவிஷ்ணு ஆலயத்தில், வரும் பிப்ரவரி - 23 செவ்வாய்க்கிழமை - ஏகாதசி புண்ணிய நாளன்று காலை 10 முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும்.
ஶ்ரீ ஜலநாராயணர் சந்நிதியில் சிறப்புப் பிரார்த்தனை
மகா சுதர்சன ஹோம வைபத்தை ஒட்டி, இக்கோயிலின் அபூர்வமாக அமைந்திருக்கும் ஶ்ரீஜலநாராயணரர் சந்நிதியில், ஹோமத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பெயர் - நட்சத்திர சங்கல்பத்துடன் சிறப்புப் பிரார்த்தனையும் நிகழவுள்ளது. அற்புதமான இந்த ஹோம- வைபவத்தில், வாசகர்கள் தங்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும், உறவினர் மற்றும் நண்பர்களுக்காகவும் சங்கல்பம் செய்து பலன் அடையலாம்.
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்), திருவள்ளூர் - பூங்காநகர் சிவாவிஷ்ணு ஆலயத்தில் அருள்மிகு ஜலநாராயணர் சந்நிதியில் விசேஷமாய்ப் பூஜிக்கப்பட்ட காப்பு ரக்ஷை ஆகியவை (5.03.2021 தேதிக்குள்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் யூடியூப் சேனல் மற்றும் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். பிப்ரவரி 22, 2021 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.