
பத்மபிரியா பாஸ்கரன், கல்வெட்டு தொல்லியல் ஆர்வலர்,
பத்மபிரியா பாஸ்கரன், குடும்பத் தலைவி. காஸ்ட் மேனேஜ்மென்ட் பயின்றவர். பழந்தமிழர் நாகரிகம், ஆன்மிகம், கட்டடக்கலை, ஆலயங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் மீது தீராத காதல் கொண்டு தன்னார்வலராக ஆய்வு மேற்கொண்டு வருபவர். ஆலயம் கண்டேன் என்னும் அமைப்பின் மூலம் சிதைவுற்றுக் கொண்டிருக்கும் பழைமை வாய்ந்த கோயில்களை அடையாளப்படுத்தி வழிபாட்டுக்கொண்டுவர முயல்பவர். இவரது கூவம் நதிக்கரைக் கோயில்கள் பற்றிய ஆய்வு மிகவும் குறிப்பிடத்தக்கது. சோழ மன்னர்கள் கூவம் நதிக்கரையில் எழுப்பிய ஆயிரம் ஆண்டுப் பழைமை வாய்ந்த கோயில்களைக் கண்டறிந்து அதைப் பல ஆர்வலர்களின் துணையோடு வழிபாட்டுக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர். சென்னை வரலாறு குறித்த இவரின் ஆய்வுகள் சுவாரஸ்யமானவை.

மு.அரி, சித்தர் கலை ஆசான்,
வர்மக்கலை மற்றும் தொல்லியல் துறையில் DMR பட்டமும் சுவடி ஆய்வு மற்றும் கல்வெட்டு இயலில் இளங்கலை பட்டம் பயின்றவர். களரி, வர்மம், வர்ம வைத்திய முறைகள், யோகம் முதலானவற்றைப் பயிற்றுவித்தலில் 10 ஆண்டு கால அனுபவம் பெற்றவர். தமிழ்க் கலைகள் குறித்த ஆய்வுகளில் 5 ஆண்டு கால அனுபவம் பெற்றவர்.
அன்பார்ந்த வாசகர்களே!
அவள் விகடன் மற்றும் சக்தி விகடன் வழங்கும், கல்வெட்டுகளில் சரித்திரப் பெண்மணிகள்! காணொளி விளக்கங்களை கல்வெட்டு எழுத்துகளைப் படித்தறிவது எப்படி? * என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
மார்ச் 20, 2021 மதியம் 12.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது..