ஆட்சிப்பாக்கம் அருள்மிகு அட்சய வரதர் திருக்கோயில், ஆட்சிப்பாக்கம்,
விழுப்புரம் மாவட்டம்
அன்பார்ந்த வாசகர்களே!
அட்சய திருதியை அன்று நாம் செய்யும் தான-தர்மங்கள் போன்ற அறக்காரியங்களால் உண்டாகும் புண்ணியங்கள், பொன், நகை ஆபரணங்கள் என நாம் வாங்கும் பொருள்கள் அனைத்தும் பல்கிப் பெருகும் என்கின்றன ஞானநூல்கள். அற்புதமான இந்த நாளில் சக்தி விகடன் மற்றும் ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் இணைந்து வழங்கும் லட்சுமி குபேர பூஜை திண்டிவனம் அருகிலுள்ள ஆட்சிப்பாக்கம் அருள்மிகு அட்சய வரதர் திருக்கோயிலில் நடைபெறவுள்ளது. அலைமகள் தங்கியிருந்து தவம்புரிந்த தலங்களில் ஒன்றுஆட்சிப்பாக்கம். இந்தத் தலத்தில்தான், குபேரன் தான் இழந்த நவநிதிகளையும் திரும்பப் பெற்றாராம். இங்கு அட்சய திருதியை நன்னாளில் லட்சுமி குபேர பூஜையும் வாசகர்களுக்குச் சகல நன்மைகளும் செல்வ வளமும் பெருகும் பொருட்டு வில்வம் முதலான தளங்கள் மற்றும் பூக்களால் அட்சய அர்ச்சனையும் நடைபெறவுள்ளன.
-
வாசகர்கள் கவனத்துக்கு :
ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர் திருக்கோயிலில் நடைபெறும் இந்த லட்சுமி குபேர பூஜை வைபவத்துக்கு வாசகர்களே உபயதாரர்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணமாக ரூ 500/- மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், அவர்களின் பெயர் - நட்சத்திரம் கூறி உரிய சங்கல்பத்துடன் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு குங்குமம், லட்சுமிப் பிரசாதமாக வில்வம், குபேர ரட்சை ஆகியவை (30.5.2021 தேதிக்குள்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி இந்தத் திருக்கல்யாண வைபவம் நிகழவுள்ளது. ஆகவே, வாசகர்கள் நேரில் தரிசிக்க இயலாத நிலையில், இந்த வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். மே 13, 2021 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.