இரா. கார்த்திகேயன், ஜோதிடர் ஶ்ரீரங்கம்,
15 ஆண்டுகளுக்கு மேலாக ஜோதிடத் துறையில் இயங்கி வருபவர். ஜோதிடம், சாஸ்திரம் மற்றும் இதிகாச புராணங்களில் ஆய்வுப் புலமை பெற்றவர். தொலைக்காட்சி மற்றும் இதழ்களில் இவரின் பங்களிப்பு அதிகம். அனைத்துத் துறை சார்ந்த தனித்துவமான ஜோதிடக் கணிப்புகளால் கவனம் ஈர்த்து வருகிறார்.
அன்பார்ந்த வாசகர்களே!
பிள்ளையார் பாரதம் எழுதத் தொடங்கியது, குபேரன் நவநிதிகளுக்கும் அதிபதியாகும் யோகம் பெற்றது, கண்ணன் அருளால் குசேலன் குபேர சம்பத்து பெற்றது ஆகிய அருள் சம்பவங்கள் நிகழ்ந்த புண்ணிய தினம் அட்சய திருதியை. `அட்சய’ என்றால் வளருதல் எனப் பொருள். ஆகவே, அன்று நாம் வாங்கும் பொருள்கள் பல்கிப் பெருகும்; நாம் செய்யும் அறக் காரியங் களுக்குப் பன்மடங்கு பலன் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள். இந்த வருடம் (14.5.2021) வெள்ளிக் கிழமை அன்று அட்சயதிருதியை வருகிறது. சுக்ரவாரத்துடன் இணைந்து வருவதால் அதீத மகத்துவம் பெறுகிறது இந்த வருடத்து அட்சயதிருதியை. இந்தத் திருநாளைச் சிறப்பிக்கும் பொருட்டு, நம் இல்லங்களில் சுபிட்சம் வளர, பொன் ஆபரணங்கள் மென்மேலும் வந்துசேர, புண்ணியம் பெருகிட எளிய பரிகாரங்கள், ஜோதிட வழிகாட்டல்களை வழங்குகிறார், ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். மே.10 திங்களன்று மாலை 4:30 மணிக்குத் தொடங்கு இந்த வெபினாரில் நீங்களும் கலந்துகொள்ளலாம்.
சிறப்பு தரிசனம்: நிறைவில்... திண்டிவனம் அருகிலுள்ள ஆட்சிப்பாக்கம் ஶ்ரீஅட்சய வரதருக்கு விசேஷ வழிபாடு சிறப்பு தரிசனம் வீடியோ வடிவில்!
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
மே 10, 2021 மதியம் 12.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.