முனைவர். பாலசுப்பிரமணியன். பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், மரச்சாகுபடித்துறை. வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம்..
சுற்றுச்சூழலுக்கும், பல்லுயிர் பெருக்கத்துக்கும் முக்கிய பங்காற்றுபவை காடுகள். அந்தக் காடுகளைக் குடியிருப்பு பகுதிகளிலும் உருவாக்க முடியும். ஒவ்வொரு குடிமகனும் பல்லுயிர் பெருக்கத்தில் பங்கேற்க முடியும் என்கிறார் தமிழ்நாடு வனக்கல்லூரியின் மரச்சாகுபடி துறையின் தலைவரும் பேராசிரியருமான முனைவர் பாலசுப்பிரமணியன். ஒரு சென்ட் இடத்திலும் குறுங்காடுகளை உருவாக்கலாம். மொட்டை மாடியிலும் காடுகளை உருவாக்க முடியும் என்று சொல்லும் முனைவர், இது தொடர்பாக விரிவான பயிற்சியும் அளிக்க இருக்கிறார்.
அன்பார்ந்த வாசகர்களே!
வீட்டு மொட்டை மாடியில் அடர் காடுகளை வளர்க்கலாம். மரங்களின் வேர் கட்டடத்துக்குள் இறங்கிவிடுமோ என்று கவலைப்பட வேண்டாம். வேர் கட்டடத்தில் இறங்காமல் வளர்க்கும் தொழில்நுட்பம்குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம். கல்லூரியின் மரச்சாகுபடித்துறை தலைவர், பேராசிரியர்.பாலசுப்பிரமணியன்.
வேம்பு, புங்கன் போன்ற வழக்கமான மரங்கள் தாண்டி அடர் காடுகளில் காணப்படும் பல்வேறு மரங்களை நடவு செய்து அடர்கவின் காடுகளை உருவாக்கும் தொழில்நுட்பங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறார். இதற்கான நேரலை பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்துள்ளன பசுமை விகடன், வனத்துக்குள் திருப்பூர். இது தொடர்பாகக் கடந்த 30.05.2021 அன்று நேரலை நிகழ்ச்சி (ஆன்லைன்) நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்ட வாசகர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து கடந்த வார நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக 06.06.2021 அன்று நேரலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் கலந்துகொண்டு அடர்கவின் காடுகள் வளர்ப்பு தொடர்பான உங்கள் சந்தேகங்களைப் பேராசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறலாம்.
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
ஜூன் 06, 2021 மதியம் 12.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.