அருள்மிகு ஆதிகேசவ பெருமாள், இறையானூர்.
திண்டிவனம் அருகில்
அன்பார்ந்த வாசகர்களே!
மகா சுதர்சன மூர்த்தியை வழிபடுவோருக்கு எவ்வித அச்சமும் உண்டாகாது. கடன் பிரச்னை, எதிரிகள் பயம், காரியத் தடைகள் யாவும் விலகும். அதேபோல் நோய் நொடி எதுவும் அண்டாமல் ஆரோக்கியத் துடன் வாழ மகா சுதர்சனரைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்கிறது சுதர்சன அஷ்டகம். குறிப்பாக மகா சுதர்சனர் அவதரித்த ஆனி மாத சித்திரை நட்சத்திர நாளில் அவரை வழிபடுவது மிகவும் விசேஷம்.
அவ்வகையில், இந்த வருடம் சுதர்சன ஜயந்தித் திருநாளான 20.6.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று, சக்திவிகடன் - ஜீ.ஆர்.டி ஜுவல்லர்ஸ் இணைந்து வழங்கும் மகா சுதர்சன ஹோமம், திண்டிவனம் அருகிலுள்ள இறையானூர் ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.
சுதர்சன ஹோம பலன்கள்!
சுதர்சனரின் மூல மந்திரம், காயத்ரி மந்திரம் ஆகியவற்றைச் சொல் லிச் செய்யப்படும் இந்த அற்புத ஹோமம், உடலை வாட்டி வதைக்கும் பிணிகள் தரும் ஆபத்துகளிலிருந்து காக்கும். மறைமுகமாகவும் நேரிடையாகவும் தொல்லைகள் அளிக்கும் பகைவர்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். தீவினைகள் தீய சக்திகளின் பாதிப்புகளிலிருந்து நம்மையும் நம் இல்லத்தையும் காத்து நிற்கும். மேலும் எளிதில் கிரஹிக்கும் ஆற்றல் கிடைக்கும். மனநல பாதிப்புகள் மெள்ள குணமாகும், குருவை - சாதுக்களை அவமதித்த பாவம் நீங்கும். இத்தகு மகிமைமிகு மகா சுதர்சன ஹோமத்தில் நீங்களும் சங்கல்பித்துத் திருவருள் பெறலாம்.
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஜூன் 19, 2021 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.