
முனைவர் புவனேஸ்வரி Yoga Therapeutic Specialist
யோகக் கலையில் முனைவர் பட்டம் பெற்றவர். சிறுவயது முதலே யோகக் கலையில் ஆர்வம் கொண்டு ரிஷிகேஷிலும் கேரளாவில் இருக்கும் சிவானந்த குருகுலத்திலும் தங்கி யோகம் பயின்றார். தற்போது யோகா புவனம் என்னும் அமைப்பை நிறுவி யோகக் கலைகளைப் பரப்பிவருவதோடு யோகாவின் மூலம் நோய்களைத் தீர்க்கும் மகத்தான பணியையும் செய்து வருகிறார்.
அன்பார்ந்த வாசகர்களே!
சர்வதேச யோகா தினமான ஜூன் 21 ம் தேதி அன்று இணையவழி யோகா பயிற்சியை வாசகர்களுக்கு வழங்க இருக்கிறார் யோகா புவனம் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் புவனேஸ்வரி. நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகப்படுத்த தினமும் 40 நிமிடங்கள் செய்ய வேண்டிய யோகப்பயிற்சிகளை இந்த வகுப்பில் நமக்குக் கற்றுத்தர இருக்கிறார் முனைவர் புவனேஸ்வரி. இவை இரண்டு பிரிவுகளாக அமையும். ஒன்று நுரையீரலை வலுவாக்கி உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்தும் மூச்சுப் பயிற்சிகள். இரண்டாவது தினமும் கட்டாயம் செய்ய வேண்டிய எளிய ஆசனங்கள். இந்த ஆசனங்கள் வயிற்றில் இருக்கும் தேவையற்ற சதைகளைக் குறைப்பதோடு தேவையற்ற வாயுக்களையும் வெளியேற்ற உதவும். இதயத்தை வலுவாக்குவதோடு இளமையையும் முகப் பொலிவையும் அதிகரிக்கும். நோயற்ற ஆரோக்கியமான வாழ்வுக்கு இட்டுச்செல்லும் முதலீடாக இந்தப் பயிற்சி வகுப்பில் செலவு செய்யும் நேரம் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்
-
நேரம் மற்றும் நிபந்தனை
ஜூன் 20, 2021 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.