நந்தீஸ்வரர் திருக்கோயில் ஆதம்பாக்கம்,
சென்னை
அன்பார்ந்த வாசகர்களே!
ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தில் சிறப்பு ருத்ர த்ரிசதி அர்ச்சனை!
சகல சிறப்புகளும் வாய்ந்த அருள்மிகு ஆவுடைநாயகி சமேத நந்தீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் ஆடி மாத பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்வது என்பது பெரும் பாக்கியம். குழந்தை வாம் அருளும் விசேஷ தலமாக இது சென்னையில் சிறப்புற்று விளங்கி வருகின்றது. திருமணத்துக்கு தடையாக உள்ள சகல தோஷங்களையும் தடைகளையும் இந்த பிரதோஷ வைபவத்தில் கலந்து கொள்வதன் மூலம் சரி செய்துவிடலாம் என்கிறார்கள். அதுமட்டுமா அம்பாள் ஆவுடையாகவும், இறைவன் நந்தியாகவும் பெயர்கொண்டு விளங்கும் ஒரே திருத்தலம் இது. மும்மூர்த்திகளும் ஒருங்கே எழுந்தருளி இருக்கும் இந்த தலத்தில் ருத்ர த்ரிசதி அர்ச்சனையும் சங்கல்பமும் செய்து கொண்டால் இல்லற வாழ்வின் எல்லா சுகங்களையும் பெறலாம் என்பது பெரும் நம்பிக்கை.
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இது முழுக்க முழுக்க இலவச சேவை. முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், அவர்களின் பெயர் - நட்சத்திரம் கூறி உரிய சங்கல்பத்துடன் சமர்ப்பிக்கப்படும். தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி இந்தத் சிறப்பு ருத்ர த்ரிசதி அர்ச்சனை வைபவம் நிகழவுள்ளது. ஆகவே, வாசகர்கள் நேரில் தரிசிக்க இயலாத நிலையில், இந்த வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
நேரம் மற்றும் நிபந்தனை
-
ஜூலை 21, 2021 மதியம் 12.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.