அருள்மிகு வரதராஜ பெருமாள் ஆலயம் இஞ்சிமேடு
வந்தவாசி- சேத்துப்பட்டு மார்க்கத்தில் வருவது சின்ன கொழப்பலூர் கூட்டுச் சாலை. இங்கே இடதுபுறமாக பிரியும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவு பயணித்தால் இஞ்சிமேடு தலத்தை அடையலாம். பாஹுநதி என்ற பெயரில் ஓடும் புண்ணிய நதி செய்யாறு. இது முருகப்பெருமான் கருணையால் உருவான நதி என்பர். இந்த நதிக் கரையில் அமைந்திருக்கிறது இஞ்சிமேடு.
அன்பார்ந்த வாசகர்களே!
'நாளை என்பதே இல்லை நரசிம்மரிடம்’ என்பார்கள் ஆன்மிக ஆன்றோர்கள். பிரகலாதன் அழைத்த கணத்திலேயே தோன்றி அருள்பாலித்தவர் அல்லவா நரசிம்மர். ஆகவே, அவரை வழிபட்டால் பலன்கள் உடனடியாகக் கிடைக்கும். அவ்வகையில் பக்தர்களும், வாசகர்களும் அவர்களின் குடும்பமும் சுற்றமும் நரசிம்மரின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று சகல நன்மைகளையும் அடையும் விதம், வந்தவாசி சேத்துப்பட்டு வழியில் உள்ள இஞ்சிமேடு அருள்மிகு வரதராஜபெருமாள் ஆலயத்தில், நரசிம்மருக்கு உகந்த ஆடி மாதம் சுவாதி நட்சத்திரமும் பெருமாளுக்குரிய சனிக்கிழமையும் கூடிய 14.8.21 அன்று சக்தி விகடன் மற்றும் ஜீ.ஆர்.டி.ஜுவல்லர்ஸ் இணைந்து வழங்கும் 'ஶ்ரீசுவாதி மஹா ஹோமம்’ நடைபெறவுள்ளது.
ஹோம பலன்கள்:
வேள்விகளுக்காகவே மண்ணில் உருவான தலம் இஞ்சிமேடு. வேள்விகளில் மகத்துவமானது, பூரணமானது `ஶ்ரீசுவாதி மஹா ஹோமம்’. ஶ்ரீநரசிம்மருக்கு உரிய நட்சத்திரம் சுவாதி. ஆக, வேள்வியின் பொருட்டு உருவான இஞ்சிமேடு திருத்தலத்தில் ஆடி மாதம் சுவாதித் திருநாளில் நிகழும் ஹோம வைபவம் வல்லமைமிக்க பலன்களை அருளும். மேலும் அன்றைய தினம் மொத்தம் 7 உயர்ந்த ஹோமங்களுடன் கூடிய ஹோமத் திருவிழாவாக இந்த வைபவம் நிகழுவுள்ளது. இந்த வைபவத்தில் சங்கல்பித்துக் கொள்வதன் மூலம் கல்யாணம் முதலான சுப காரியங்கள் கைகூடும். தீவினைகள் மற்றும் தோஷங்கள் யாவும் விலகும். இல்லத்தில் லட்சுமி கடாட்சம் பெருகவும், பகை வெல்லவும் இந்த அற்புத ஹோமம் அருள்செய்யும். விசேஷமான இந்த ஹோமத்தில் நீங்களும் சங்கல்பித்து பலன்பெறலாம்.
-
வாசகர்கள் கவனத்துக்கு::
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஆகஸ்ட் 13, 2021 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.