
வி.தியாகராஜன் ஆடிட்டர், www.bizlane.in
வி.தியாகராஜன், சென்னையில் வசிக்கும் ஆடிட்டர். முன்னணி வங்கிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆடிட்டிங் தொடர்பான ஆலோசனை தந்து வருகிறார்.
.png)
இரா.சரவணன் வழக்கறிஞர் , Lawyerchennai.com
வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசகர் இராஜேந்திரா சட்ட அலுவலகம் சென்னை - Lawyerchennai.com
அன்பார்ந்த வாசகர்களே!
பலர் அவசரத் தேவைக்காக கந்து வட்டிக்கு பணம் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதில் காலையில் 750 ரூபாய் வாங்கினால் மாலையில் 1,000 ரூபாயாக திரும்ப கொடுக்க வேண்டும். இப்படி கடனை மேலும் மேலும் வாங்கி விட்டு கடனை கட்ட முடியாமல் பலர் தூக்கில் தொங்கி இருக்கிறார்கள்; தீக்குளித்து மரணம் அடைந்திருக்கிறார்கள். பணம் வாழ்க்கைக்கு மிக முக்கியம்தான். ஆனால், அதற்கு கொடுக்கும் வட்டியானது வங்கி வட்டியை விட அதிகமாக இருக்கும் போது ரன் வட்டி, மீட்டர் வட்டி என பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் பொதுவாக கந்து வட்டி என சொல்லப்படுகிறது. இந்தக் கந்து வட்டி சிக்கலிருந்து மீள தற்கொலை மட்டும்தான் தீர்வு அல்ல. கந்து வட்டி சிக்கலுக்கு என்ன தீர்வு என்பதை விளக்கி சொல்லும் நிகழ்ச்சிதான் 'கந்து வட்டி சிக்கல்: மீள்வது எப்படி?' என்கிற இந்த நிகழ்ச்சிதான்.
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
செப்டம்பர் 5-ம், 2021 மதியம் 12.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.