ஸ்ரீஆத்யந்த பிரபு திருக்கோயில் வல்லக்கோட்டை அடுத்த வடக்கால்
கணபதியும் அனுமனும் இணைந்த ஆத்யந்த பிரபு மூலவராக அமர்ந்திருக்கும் ஒரே ஆலயம் சென்னையை அடுத்த வல்லக்கோட்டை அடுத்த வடக்கால் பகுதியில் சென்னை ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வரங்களை வாரி வழங்கும் காமதேனுவாக, கற்பக விருட்சமாக ஸ்ரீஷீரடி சாய்பாபாவும் எழுந்தருளி உள்ளார் என்பது சிறப்பாகும்.
அன்பார்ந்த வாசகர்களே!
முழுமுதல் கடவுளான கணபதியை வணங்கியே எந்த ஒரு காரியமும் தொடங்கப்படும். அதேபோல ராமதூதனான அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்வோம். ஆதி கணபதி என்றால் அந்தம் அனுமன் என்பர் பெரியோர். விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை ஸ்ரீஆத்யந்த பிரபு என்று வணங்குகிறோம். பெருமைகள் பல கொண்ட இந்த ஸ்ரீஆத்யந்த பிரபு ஆலயத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 5-9-2021 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி 'ஸ்ரீஜெய விஜய மகா ஹோமம்' நடைபெறவுள்ளது. எல்லா காரியத்திலும் வெற்றியை பெற உதவும் இந்த ஹோமத்தால் பல நன்மைகள் உண்டு.
ஹோம பலன்கள்:
பதவி உயர்வு, வேலை வாய்ப்பு, வெளிநாட்டு வாய்ப்பு, வழக்கில் வெற்றி, சொத்துப் பிரச்னைகளில் தீர்வு, உறவுகளில் சிக்கல், எண்ணியவை நிறைவேறுதல், அச்சங்களில் இருந்து விடுதலை என பல்வேறு பலன்களை அளிக்கும் அபூர்வ ஹோமம் இது. 108 கணபதி ஹோமமும் 108 ஸ்ரீவைணதேய ஆஞ்சநேய ஹோமமும் இணைந்த பலனை இந்த ஹோமம் தருமாம்.
அபூர்வ மூலிகைகள் கொண்டு செய்யப்படும் இந்த ஹோமத்தால் சர்வ ரோகங்களும் நீங்கும் என்கிறார்கள். இந்த ஹோமத்தோடு ஷீரடி சாயிநாதருக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளன.
கணபதியையும் அனுமனையும் ஒரு சேரத் தொழும் இந்த ஹோமத்தில் சிரத்தையுடன் பங்கேற்பவர்களுக்கு இருவரின் பேரருளால் கர்ம வினைகள் நீங்கி நீங்காத கல்வி அறிவும், சிறப்பான ஞானமும், கேடில்லா செல்வமும், உண்டாகும். சகல காரிய அனுகூலம் உண்டாகும், எதிரிகளின் இடையூறுகள் விலகும். சகல நோய்களும் நீங்கி, அஷ்ட ஐஸ்வர்யங்களுடன் வாழும் நிலையைப் பெறலாம்.
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ரட்சை + ஹோம பஸ்மம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். செப்டம்பர் 4, 2021 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.