கீழப்பாவூர் ஸ்ரீசாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடம் தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் அமைந்துள்ள ஸ்ரீசாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடத்தில் எழுந்தருளி இருக்கும் பிரகலாத வரத ஸ்ரீசாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹர் ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பவர். நரசிம்ஹரின் மடியில் வீற்றிருக்கும் இந்த சாம்ராஜ்ய லட்சுமி நவநிதிகளையும் கம்பீர வாழ்வையும் அருளக் கூடியவள்.
அன்பார்ந்த வாசகர்களே!
செல்வங்களை வாரி வழங்கும் திருமகளை வெள்ளிக்கிழமை நாள்களில் வழிபடுவது சிறப்பானது. பௌர்ணமி நாள் இன்னும் விசேஷமானது. வில்வம், தாமரை, மல்லிகை, விசேஷ சமித்துகள் கொண்டு ஸ்ரீசூக்த ஹோமம் செய்து வழிபட்டால் செல்வவளம், கடன் நிவர்த்தி, வியாபார அபிவிருத்தி, பதவி உயர்வு என சகலமும் அருள்வாள் என்கிறது ஆன்மிகம்.
ஸ்ரீமகாலட்சுமியின் ஸ்ரீசூக்த ஹோமம் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு விருத்தி ஹோமம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். வரும் புரட்டாசி மாத பௌர்ணமி (20-9-2021) திங்கள்கிழமை நாளில், உமாமகேஸ்வரீ விரத தினத்தில் ஸ்ரீசூக்த ஹோமம் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் அமைந்துள்ள ஸ்ரீசாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடத்தில் இந்த வைபவம் நடைபெற உள்ளது.
இன்னும் சிறப்பாக இந்த பீடத்தில் எழுந்தருளி இருக்கும் பிரகலாத வரத ஸ்ரீசாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹர் ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பவர். திருமாலின் திருமார்பில் அமர்ந்து கொண்டிருந்தால் திருமாலின் திவ்ய முகத்தை தரிசிக்க முடியவில்லை என்பதால் திருமகள் நரஸிம்ஹ மூர்த்தியின் மடியில் அமர்ந்து சேவை சாதிக்கிறாள். இந்த சாம்ராஜ்ய லட்சுமி நவநிதிகளையும் கம்பீர வாழ்வையும் அருளக் கூடியவள்.
சிறப்புமிக்க இந்த ஹோமத்தை ஸ்ரீசாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடமும் உங்கள் சக்தி விகடனும் இணைந்து நடத்தித் தர உள்ளார்கள். எனவே துக்கத்தால் துன்பப்படுபவர்கள், தகுதி இருந்தும் உயர முடியாமல் இருப்பவர்கள், ஏழ்மை, கடன் பிரச்னை, வியாபாரம் - தொழில் மந்தம் கொண்டவர்கள், வேலை; வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்காமல் அவதிப்படுவோர் என அனைவரும் இந்த ஸ்ரீசூக்த ஹோமத்தில் கலந்து கொண்டால் நிச்சயம் உயர்வும் பெருமையும் அடைவர் என்பது நிச்சயம்.
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ரட்சை, குங்குமம் + ஹோம பஸ்மம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். செப்டம்பர் 19, 2021 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.