ஸ்ரீவள்ளி-தெய்வயானை சமேத முருகப்பெருமான் திருக்கோயில் தணியல், விழுப்புரம் மாவட்டம்.
அசுரன் சூரபத்மனை சம்ஹாரம் செய்த முருகப்பெருமான், திருத்தணிகை செல்லும் வழியில் தங்கி இருந்த திருத்தலம் தணியல். அசுர சக்திகளோடு போரிட்டதால் கடும் சினம் கொண்ட முருகப்பெருமான் இந்த அழகிய கிராமத்தில் தங்கி இருந்து தனது சினம் தணிந்ததால் இந்த ஊரே தணியல் என்றானதாம். இத்தனைப் பெருமை கொண்ட திருத்தலத்தில் வரும் கந்த சஷ்டி விழாவை ஒட்டி உங்கள் சக்தி விகடனும் தணியல் முருகப்பெருமான் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து மகாஸ்கந்த ஹோமம் ஒன்றை நடத்த உள்ளது.
அன்பார்ந்த வாசகர்களே!
தீமைகளை அழித்து நன்மைகளை நிலை நாட்டிய அற்புத விழா கந்த சஷ்டி. முருகப் பெருமானின் பக்தர்களுக்கு கந்த சஷ்டி விரதம் என்பது முக்கியமான ஒன்று. வரும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி அன்று கந்த சஷ்டி விரதம் தொடங்க உள்ளது. நவம்பர் 9-ம் தேதி சூர சம்ஹார விழா நடைபெற உள்ளது.
சகல தேவர்களும் வழிபட்ட கடவுள் முருகப்பெருமான். முருகப்பெருமானை ஆராதிக்கும் விழாக்களில் சிறந்தது கந்த சஷ்டி விழா. அந்த விழாவிலும் சிறந்த ஆராதனை என்று போற்றப்படுவது மகாஸ்கந்த ஹோமம். வாசகர்களின் நலத்துக்காகவும் வளத்துக்காகவும் இந்த ஹோமத்தை நடத்த உள்ளோம். கந்த சஷ்டி நாளின் நான்காவது நாளான (7-11-21) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை மகாஸ்கந்த ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் சங்கல்பித்து வழிபட்டால் தடைகள் விலகி நன்மைகள் கிடைக்கும்.
இந்த ஹோமத்தில் கலந்து கொள்வதால் காரிய ஸித்தி உண்டாகும். அச்சங்கள் விலகும். சொத்து சேரும், சோதனைகள் விலகும். திருமண பாக்கியம், சந்தானப் பேறு போன்ற மங்கலப் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அனைவரும் இந்த மகாஸ்கந்த ஹோமத்தில் கலந்து கொண்டு அருளும் பொருளும் பெற்று வாழ வேண்டுகிறோம்.
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் + ரட்சை) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். நவம்பர் 6, 2021 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.