ஸ்ரீமரகதாம்பிகை சமேத ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் ஆலயம், கீழ்ப்பசார் விழுப்புரம் மாவட்டம்.
1500 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயம் சித்தர் பெருமக்கள் பலரும் பூஜித்த பெருமை கொண்டது. வேறெங்குமே இல்லாத வகையில் இங்கு மட்டுமே மிகப்பெரிய சந்நிதி ஸ்ரீசுக்கிர பகவானுக்கு என்று இருந்து வருகிறது. சுக்கிர பகவான் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டு, தம்முடைய சாபங்கள் நீங்கி செல்வவளம் அருளும் அருள்பெற்றார். ஆகவே, இந்தத் தலம் சுக்கிரப் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது.
அன்பார்ந்த வாசகர்களே!
சுக்கிரன் ஒருவர் மட்டுமே அனைத்து லக்னங்களுக்கும் கேந்திரங்களில் ஆட்சி அல்லது உச்சம் பெறுவார். மற்ற கிரகங்களுக்கு இந்தச் சிறப்பு கிடையாது. இதனால் சுக்கிரன் அருள் பெற்றவர் சகல நன்மைகளையும் அடைவார் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
நல்ல மனைவி, வீடு, வாகனம், நிலபுலம், மகிழ்ச்சியான வாழ்க்கை உள்ளிட்ட அனைத்து நற்பலன்களையும் தருபவர் சுக்கிரன் ஒருவரே. அதனால் லௌகீக வாழ்க்கைச் சுகங்களுக்கு சுக்கிரனே அதிபதி எனலாம். வம்ச விருத்திக்கு அதிபதியும் சுக்கிரன்தான். இதனால்தான் இவரை `களத்திரகாரகன்' என்று அழைக்கின்றனர். எனவே குழந்தைப்பேறு, திருமண வரம், வியாபார விருத்தி, மகிழ்ச்சியான ஆரோக்கியம் வாழ்வு பெற என வாசகர்களின் நலத்துக்காகவும் வளத்துக்காகவும் ஸ்ரீசுக்கிரப் பரிகார மஹாஹோமத்தை திண்டிவனம் கீழ்ப்பசாரில் உள்ள ஸ்ரீமரகதாம்பிகை சமேத ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் நடத்த உள்ளோம். கார்த்திகை மாதம் 17-ம் நாள் (3-12-21) வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி முதல் 3 மணி வரை சுக்கிர ஹோரையில் ஸ்ரீசுக்கிரப் பரிகார மஹாஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் சங்கல்பித்து வழிபட்டால் லௌகீக சுகங்கள் அனைத்தும் பெறலாம்.
இந்த ஹோமத்தில் கலந்து கொள்வதால் சந்தான பாக்கியம் கிடைக்கும். நல்ல திருமண வரன் கிடைக்கும். செல்வவளம் சேரும். சுக்கிர யோகத்தால் பூமியில் உள்ள அத்தனை போகங்களையும் அனுபவிக்கும் வாய்ப்பு கிட்டும். வியாபார விருத்தி, தொழில் அபிவிருத்தி, அதிர்ஷ்ட வாய்ப்புகள், வெளிநாட்டு பயணங்கள் அமையும். மேலும் தாங்கள் எண்ணிய யாவும் நிறைவேறும் என்று சொல்லி நல்லதே நடைபெற இறைவனை வாழ்த்தி வேண்டுகிறோம்.
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் + ரட்சை) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். டிசம்பர் 02, 2021 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.