பிரியா ராஜ்நாராயணன் பாரம்பர்ய விதை சேகரிப்பாளர்.
அழிந்து வரும் பாரம்பர்ய விதைகளைத் தேடித்தேடி சேகரிக்கும் பிரியா, அதனை விளைய வைத்து, அதன் விதைகளை எடுத்து மற்றவர்களுக்கும் கொடுத்து வருகிறார். விதைத்தீவு என்ற பெயரில் இயங்கும் பிரியாவிடம் கத்திரிக்க்காயில் மட்டும் 40 க்கும் மேற்பட வகைகள், நாட்டு தக்காளி, வித்தியாசமான அவரை எனப் பலருக்கும் தெரியாத வித்தியாசமான ரக பாரம்பர்ய காய்கறி விதைகளை வைத்துள்ளார். அதனை வீட்டுத்தோட்டத்தில் பயன்படுத்தும் முறைகள்குறித்து கலந்துரையாட இருக்கிறார்.அதற்கான இணைய வழி நேரலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது பசுமை விகடன்.
அன்பார்ந்த வாசகர்களே!
பசுமை விகடன் வழங்கும், மாயன் கீரை, சிறகு அவரை, வெங்கேரி கத்திரி...வீட்டுத்தோட்டத்தில் பாரம்பர்ய விதைகள்! நேரலை நிகழ்ச்சி நவம்பர் 29-ம் தேதி மாலை 5.30 மணி முதல் 06.30 மணிவரை நடைபெறும். வழக்கொழிந்த பல்வேறு வகையான பாரம்பர்ய விதைகளை வீட்டுத்தோட்டத்தில் பயன்படுத்தும் வழிமுறைகள்குறித்து நிகழ்ச்சியில் கலந்துரையாட இருக்கிறார்கள். விருப்பமுள்ளவர்கள் கலந்துகொண்டு பயனடைய அழைக்கிறோம்.
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
நவம்பர் 29, 2021 மதியம் 12.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.