
ஸ்ரீ சுந்தரவிநாயகர் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயம், சுந்தரம் நகர், தஞ்சாவூர்.
சோழர்களின் சொர்க்க பூமியாம் தஞ்சையில் புகழ்பெற்ற தர்மசாஸ்தா ஆலயத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஸ்ரீஐயப்ப மகாஆராதனை விழா சக்தி விகடன் வாசகர்களோடு நடைபெற உள்ளது. சபரிமலை முன்னாள் மாளிகைபுரம் மேல்சாந்தி பிரம்மஸ்ரீ அனிஸ் நம்பூதிரி, பிரம்மஸ்ரீ மனோஜ் நம்பூதிரி ஆகியோர் தலைமையில், காடந்தேத்தி சிவஸ்ரீ. பால சிவாத்மஜன் குருக்கள் மற்றும் மஹாசாஸ்த்ரு பிரியதாசன் ஸ்ரீ அரவிந்த் சுப்ரமண்யன் அவர்களால் பூஜைகள் நடைபெற உள்ளது.
அன்பார்ந்த வாசகர்களே!
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தஞ்சையில் வழிபடப்படும் அத்தி மர ஐயப்பன், தெய்வத்திரு மகாகுரு. நடிகர். நம்பியார் சுவாமிகள், வழிபட்ட 18-ம் படியில் வைத்து ஆராதிக்கப்படும். அது வரும் டிசம்பர் 18-ம் நாள் (மார்கழி-3ம் நாள்) சனிக்கிழமை அதிகாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பல்வேறு சிறப்பு பூஜைகளுடன், தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ரோட்டில் உள்ள மங்களபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள 'அருள்மிகு சுந்தர விநாயகர் - ஸ்ரீதர்ம சாஸ்தா' ஆலயத்தில் நடைபெற உள்ளது.
வேண்டியதை அள்ளித்தரும் கலியுக வரதனாம் ஸ்ரீஐயப்பனை ஆராதிக்கும் காலம் இது. சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசிக்க இயலாத பக்தர்களுக்காக அதே போன்ற ஆராதனைகளை தஞ்சையில் நடத்த உள்ளோம். இந்த அற்புத ஆராதனையில் காலையில் ஸ்ரீமஹா கணபதி ஹோமம், ஸ்ரீசண்டிகா தேவி ஹோமம், ஸ்ரீஉமா மாகேஸ்வர பூஜை, ஸ்ரீவிஷ்ணு பூஜை, ஸ்ரீசர்ப்ப பூஜை, ஸ்ரீஹரிஹர ஐயனார் பூஜை, நெய் அபிஷேகம், களபாபிஷேகம், உச்சிகால பூஜை, 1008 தாமரை மலர்களால் ஐயப்பனுக்கு அர்ச்சனை, 108 நீராஞ்சனம், பகவதி பூஜை, படி பூஜை, ஹரிவராசனம், அருள்பிரசாதம் வழங்குதல் என விரிவான பிரமாண்ட பூஜைகள் நடைபெற உள்ளன.
கடந்த 12 ஆண்டுகளாக நடைபெறும் இந்த ஆராதனையில் கலந்து கொள்வதால் சுகமான வாழ்வும் சௌபாக்கிய நலமும் கிட்டும். நவகிரக தோஷங்கள் யாவும் நீங்கும். திருமண யோகம், புத்திர பாக்கியம், வியாபார விருத்தி, தொழில் அபிவிருத்தி, அதிர்ஷ்ட வாய்ப்புகள், வெளிநாட்டு பயணங்கள் நலமாக அமையும். எண்ணிய யாவும் ஸ்ரீஐயப்பனின் அருளால் இனிதே நிறைவேறும் என்று நம்பி, இந்த இனிய வைபவத்தில் கலந்து கொள்வோம்!
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் + ரட்சை) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். டிசம்பர் 17, 2021 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.