தோரணமலை முருகன் கோயில், தென்காசி – கடையம் சாலை.
தென்காசியிலிருந்து கடையம் போகும் வழியில், அமைந்திருக்கிறது தோரணமலை. அகத்தியர் இங்கு தங்கி பல மூலிகைகளை ஆய்வு செய்திருக்கின்றார் என்பார்கள். அகத்தியரின் சீடரான தேரைய சித்தர் இங்கு அருவுருவமாக இருந்து பக்தர்களின் குறைகளைத் தீர்ப்பதாக ஐதீகம். தைப்பூசத்திருநாள் இங்கு விசேஷம் எனலாம். அதில் முருகப்பெருமானை ஆராதிக்கும் ஸ்ரீமகா ஸ்கந்த ஹோமம் மிகவும் விசேஷமானது. இதில் கலந்து கொண்டால் சகல துன்பங்களும் நீங்கி ஐஸ்வரியங்கள் பெருகும் என்பது நம்பிக்கை.
அன்பார்ந்த வாசகர்களே!
தேவர்களும் சித்தர்களும் தங்கியிருந்து வழிபட்ட தோரணமலை பூலோக ஸ்கந்தபுரம் என்றே போற்றப்படுகிறது. இங்கு வந்தால் ஸ்ரீ வல்லப விநாயகர், நவகிரக சந்நிதி, ஸ்ரீ குருபகவான், ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி, சப்த கன்னிமார்கள், ஸ்ரீ கன்னிமாரம்மன், நாகர்கள் ஆகியோரைத் தரிசிக்கலாம். மேலும், ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ஈனின் சுதைச் சிற்பங்களும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
பிரமாண்ட தோரணமலை அடிவாரத்தில் இருந்து 926 படிகள் ஏறிச் சென்றால், உச்சியில் உள்ள குகைக்கோயிலை அடையலாம். குகைக்கோயிலில் கிழக்கு நோக்கி ஞானசொரூபனாக எழில்கோலம் காட்டுகிறான் அழகு முருகன். இவர் அகத்தியரால் ஸ்தாபிக்கப்பட்டவர் என்றும் இவரே அகத்தியருக்கு பல கலைகளையும் சொல்லிக் கொடுத்தவர் என்றும் சொல்லப்படுகிறார்.
இங்கு நடைபெறும் தைப்பூச திருவிழாவையொட்டி நாள் முழுவதும் பல ஆராதனைகள் நடைபெற உள்ளன. அதில் உட்சபட்ச ஆராதனையாக மகாஸ்கந்த ஹோமம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டால் தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும், குழந்தை பாக்கியம் பெறுவர், கடன் தொல்லை கொண்டவர்கள் விடுபடுவர், பல்வேறு தோஷங்கள்-துன்பங்கள் கொண்டவர் பலன் பெறுவர் என்று உறுதியாகச் சொல்லப்படுகிறது. துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் சூழ இந்த இனிய வைபவத்தில் கலந்து கொள்வோம்!
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்+விபூதி+குங்குமம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஜனவரி 17, 2022 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.