திருமிகு. ராஜ்குமார், முன்னோடி பண்ணையாளர்,
பச்சை ரத்தம் எனப்படும் கோதுமைப் புல்லை வளர்த்து மாதம் மாதம் வருமானம் பார்க்கலாம். புல்லைப் பொடியாக்கி, நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் சந்தைப்படுத்தலாம். இது தொடர்பாகக் கோதுமை புல் வளர்த்து பொடி செய்து அமேசான் மூலமாக விற்பனை செய்து வருகிறார் பண்ணையாளர் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார். அவர், கோதுமைப் புல் வளர்க்கும் முறைகள், பொடியாக்கி சந்தைப் படுத்தும் முறைகள்குறித்து பேச இருக்கிறார். அதற்கான இணைய வழி நேரலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது பசுமை விகடன்.
அன்பார்ந்த வாசகர்களே!
பசுமை விகடன் வழங்கும், மாத வருமானம் கொடுக்கும் கோதுமை புல்! குறித்த நேரலை நிகழ்ச்சி பிப்ரவரி 04-ம் தேதி மாலை 4.30 மணி முதல் 05.30 மணிவரை நடைபெறும். குறைந்த இடத்தில் கோதுமை புல் வளர்த்து, விற்பனை செய்யும் வழிமுறைகள்குறித்து நிகழ்ச்சியில் கலந்துரையாட இருக்கிறார்கள். விருப்பமுள்ளவர்கள் கலந்துகொண்டு பயனடைய அழைக்கிறோம்.
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
பிப்ரவரி 4, 2022 மதியம் 3.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.