ஸ்ரீமங்களாம்பிகை உடனாகிய ஸ்ரீமங்களேஸ்வரர் கோயில் மங்களபுரி எனும் இறையானூர் - திண்டிவனம்
சிவம் என்றாலே மங்கலம் என்று பொருள். இந்தத் தலத்தில் சர்வமங்கலங்களும் அருளும் விதம், அருள்மிகு மங்களேஸ்வரர் என்றே திருப்பெயர் ஏற்று அருள்பாலிக்கிறார் ஈசன். அம்பிகை சகலமும் அருளும் மங்களாம்பிகை. அகத்திய பெருமானால் எழுப்பப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று. வடஉத்திரகோச மங்கை என்று போற்றப்படும் இந்த தலத்தில் அம்பிகை, சூரியன், இந்திரன், ஊர்வசி உள்ளிட்ட அநேகர் வழிபட்டு அருள் பெற்று இருக்கிறார்கள் என்கிறது தலவரலாறு. பதினெட்டு சித்தர்களால் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட கால பைரவர் இங்கு ‘கால சங்கார மூர்த்தியாக’ அருளுகிறார். இவரை வழிபட யம பயம் நீங்கும் என்கிறார்கள்.
அன்பார்ந்த வாசகர்களே!
மங்களபுரி எனும் இந்த தலம் யம பயம் நீக்கும் ஆலயம் என்றும் ஈசன் மிருத்யஞ்சயராக தேவர்களுக்கு அருளிய தலம் என்பதாலும் இது ஆயுள் விருத்தி மற்றும் ஆரோக்கியம் அளிக்கும் தலமாக விளங்குகிறது. மேலும் தேவர்கள் சகலரும் கூடி நான்கு கால மகாசிவராத்திரி பூஜைகளையும் அனுஷ்டித்த ஊர் இந்த மங்களபுரி என்பதால் இங்கு செய்யும் எந்த பூஜையும் பல மடங்கு பலன்களைத் தரும் என்கிறார்கள். முதல் கால பூஜையை இந்திராதி தேவர்களும், இரண்டாவது கால பூஜையை பிரம்மா - விஷ்ணுவும், மூன்றாவது கால பூஜையை 18 சித்தர்களும், சப்த ரிஷிகளும், நான்காவது காலத்தை அன்னை சக்தியும் கொண்டாடியதாக ஐதீகம். எனவே இங்கு செய்யப்படும் மிருத்யஞ்ச மகாஹோமம் உங்களின் எல்லாவித அச்சங்களையும் நீக்கி அருளையும் ஆயுளையும் வழங்கும் என்பது உறுதி. மேலும் அகால ஆபத்துக்கள் குறித்த பயம் அகலும், சகல சம்பத்துக்களையும் அடைய வழி வகுக்கும்.
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்+குங்குமம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
https://www.facebook.com/SakthiVikatan -
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். மார்ச் 1, 2022 மாலை 4.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.