
அருளும் ஸ்ரீகாலபைரவர் ஆலயம் திருவையாறு - கும்பகோணம் சாலை
திருவையாறு - கும்பகோணம் சாலையில் உள்ள வைரவன் கோயில் என்ற திருத்தலத்தில் அருளும் ஸ்ரீகாலபைரவர் ஆலயம் புகழ்பெற்றது. இது தென்னாட்டு வாரணாசி என்றும் போற்றப்படுகிறது. இத்தலத்தில் நடைபெறும் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஹோமம், நவ பைரவர் ஹோமம், பைரவ காயத்ரி ஹோமம் போன்றவை பிரஸித்தமானவை. இந்த ஹோமங்களில் கலந்து கொண்டு காரியத்தடைகள் அகன்றவர்கள் அநேகம் பேர். சகலவிதமான அச்சங்களில் இருந்தும் விடுபட்டு செல்வவளம் பெற இந்த வழிபாட்டில் கலந்து கொள்வர். அபூர்வமான இந்த பைரவ வழிபாட்டில் நீங்களும் கலந்து கொள்ள சகல நன்மைகளும் உண்டாகும்.
அன்பார்ந்த வாசகர்களே!
பங்குனி தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுவது மிகுந்த நன்மைகளை உருவாக்கும். இந்நாளில் சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொண்டால் சகலவித தீமைகளும் நீங்கி செல்வவளம் சேரும். ராகு கேது பெயர்ச்சி நடைபெற்ற இந்த தருணத்தில் பைரவரை வழிபடுவது நல்ல யோகங்களை அளிக்கும் என்கிறது சாஸ்திரம். ராகு கேதுவை முப்புரி நூலாக ஏற்று இருப்பவர் பைரவ மூர்த்தி. இவர் மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி இருக்கும் கோலம் காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும். எனவே பைரவ வழிபாட்டுக்கு சிறந்த வைரவன் கோயிலில் பைரவருக்கான 3 ஹோமங்கள், சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொண்டு சகலவிதமான இன்னல்களில் இருந்தும் விடுபட்டு சந்தோசம் பெறுங்கள்.
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்+விபூதி) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
https://www.facebook.com/SakthiVikatan -
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். மார்ச் 25, 2022 மாலை 4.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.