ஸ்ரீமஹாராஜ குபேர ஹோமம், ஸ்ரீராஜகுபேரர் திருக்கோயில்,
சென்னை பெங்களூரு சாலையில் உள்ள வெள்ளைகேட் அருகே குபேரபட்டினத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீகுபேரர் ஆலயம். இது தன விருத்தி தலமாகவும் கடன் நிவர்த்தி தலமாகவும் விளங்கி வருகிறது. சொர்ண ஈஸ்வரரும் குபேரரும் திருமகளும் அருள் பாலிக்கும் இந்த தலத்தில் நடைபெறும் ஸ்ரீமஹாராஜ குபேர ஹோமம் மிகமிக விசேஷமானது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு கடன் பிரச்னைகள் அகன்றவர்கள் அநேகம் பேர். செல்வவளம் பெற இந்த வழிபாடு அவசியமானது. அபூர்வமான இந்த குபேர வழிபாட்டில் நீங்களும் கலந்து கொள்ள சகல நன்மைகளும் உண்டாகும்.
அன்பார்ந்த வாசகர்களே!
வரும் சுபகிருது ஆண்டில் எல்லாவிதமான நன்மைகளும் பெற சொர்ணபைரவரை வழிபடுவது சிறந்தது என்கிறார்கள் ஆன்றோர்கள். இந்நாளில் சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொண்டால் கடன்கள் தீர்ந்து வியாபார விருத்தி, தொழில் வளம், உத்தியோக உயர்வு, உத்தியோகப் பிராப்தி, வெளிநாட்டு யோகம் யாவும் கிடைத்து செல்வவளம் சேரும். ஈசனும் குபேரரும் ஒருசேர அருள்பாலிக்கும் இந்த தலத்தில் சிறப்பு யாகங்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொண்டு சகலவிதமான இன்னல்களில் இருந்தும் விடுபட்டு சம்பத்துக்களைப் பெறுங்கள்.
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்+குங்குமம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
https://www.facebook.com/SakthiVikatan -
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஏப்ரல் 13, 2022 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.