ஸ்ரீஅஷ்ட தச புஜ ஆதிமகாலட்சுமி ஹோமம்! மதுரை திருமங்கலம், சத்ய யுக சிருஷ்டி கோயில்.
மதுரை திருமங்கலத்தில், மதுரை - விருதுநகர் ரோடு, ராயபாளையம் செல்லும் வழியில் உள்ள சத்ய யுக சிருஷ்டி கோயிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீஅஷ்ட தச புஜ ஆதிமகாலட்சுமி 18 கரங்களுடன், 16 வகை செல்வங்களையும், அபயமும் ஆற்றலும் தரக்கூடியவளாக எழுந்தருளி இருக்கிறாள்.
அன்பார்ந்த வாசகர்களே!
முக்தி நிலையம் எனப்படும் சத்ய யுக சிருஷ்டி கோயிலில் எல்லா தெய்வங்களின் சந்நிதிகளும் உள்ளன. 108 சந்நிதிகளில் 600க்கும் மேற்பட்ட தெய்வங்களின் மூர்த்தங்கள் உள்ளன. 108 நாகர் சிலைகளும் உள்ளன. இங்குதான் ஸ்ரீஅஷ்ட தச புஜ ஆதிமகாலட்சுமி எனும் மகாதேவி வீற்றிருக்கிறாள். இவளை பௌர்ணமியில் வழிபட்டால் சகல வளங்களையும் தருவாள் என்கின்றன சாஸ்திரங்கள்.
அபூர்வ வகை கோலத்தில் வீற்றிருக்கும் இந்த திருமகளை வரும் 15-5-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று (விஷ்ணுபதி புண்ய காலம், பௌர்ணமி சுவாதி நட்சத்திரம் காலை 10 முதல் 11.30 மணி வரை) நம் வாசகர்கள் நலம் பெற, ஸ்ரீமகாலட்சுமி ஹோமம் நடத்த உள்ளோம். இந்த ஹோமத்தை சத்ய யுக சிருஷ்டி கோயில் நிர்வாகமும் உங்கள் சக்தி விகடனும் இணைந்து நடத்த உள்ளோம்.
அன்பர்கள் யாவரும் இந்த ஹோமத்தில் சங்கல்பிக்கலாம். கடன் பிரச்னை, காரிய ஸித்தி வேண்டும் அன்பர்களுக்கு இந்த ஹோமம் ஒரு நல்வாய்ப்பு எனலாம். இந்த ஸ்ரீமகாலட்சுமி ஹோமத்தில் சங்கல்பித்துப் பிரார்த்தித்தால் நித்ய சௌபாக்கிய, ருண நிவாரண வாழ்வை அடைவர் என்பது நிச்சயம்.
அபூர்வமான சமித்துக்கள், மலர்கள், மூலிகைகள் கொண்டு நடைபெறும் இந்த ஹோமத்தால் உங்கள் வீட்டில் சந்தோஷம், மன நிம்மதி பெருகும். சுற்றத்தார் நம்பிக்கை கூடும். கடன் தொல்லை நீங்கும். வியாபார-தொழில் அபிவிருத்தி உண்டாகும். அனைத்திலும் வெற்றி வசமாகும். தீராத நோய்கள் தீரும். தனம், தான்யம், காரிய ஸித்தி, மாங்கல்ய பலம், மகப்பேறு, சௌபாக்கிய வாழ்வு, அதிகாரம், பதவி உயர்வு, சொந்த வீடு, வேலை வாய்ப்பு, உறவு சுமூகம், செல்வாக்கு, சொல்வாக்கு, வெளிநாட்டு யோகம் என சகல நன்மைகளும் உண்டாகும்.
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (குங்குமம் + ஹோம பஸ்மம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாதவர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். மே 14, 2022 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.