திருமிகு.ஸ்ரீனிவாஸாச்சார்யா, முன்னோடி விவசாயி மற்றும் கால்நடை ஆய்வாளர்.
வெள்ளாட்டுப்பால் உற்பத்திக்கு ஏற்ற ஆட்டினங்கள் கொட்டில் முறையில் லாபகரமான ஆடுகள் பராமரிப்பு வெள்ளாட்டுப்பாலுக்கான விற்பனை வாய்ப்புகள் தீவன மேலாண்மை, வெள்ளாட்டுப்பாலை பதப்படுத்துதல், பேக்கிங், மதிப்புக்கூட்டுதல் உள்ளிட்டவை குறித்து பண்ணையிலேயே நேரடி செயல்விளக்கம்
Training Details
* வெள்ளாட்டுப்பால் உற்பத்திக்கு ஏற்ற ஆட்டினங்கள்
* கொட்டில் முறையில் லாபகரமான ஆடுகள் பராமரிப்பு
* வெள்ளாட்டுப்பாலுக்கான விற்பனை வாய்ப்புகள்
* தீவன மேலாண்மை, வெள்ளாட்டுப்பாலை பதப்படுத்துதல்,பேக்கிங்,மதிப்புக்கூட்டுதல் உள்ளிட்டவை குறித்து பண்ணையிலேயே நேரடி செயல்விளக்கம்
* குறிப்பு : பயிற்சி சென்னையில் நடைபெறும்.
-
மெயிலில் ரசீது..!
நீங்கள் பயிற்சிக் கட்டணம் செலுத்தியவுடன் உங்கள் மெயில் முகவரிக்கு ரசீது அனுப்பப்படும். இதுதான் நீங்கள் பணம் செலுத்தியதற்கான உறுதியளிக்கப்பட்ட சான்றாகும்.
-
கட்டணம் திரும்பக் கிடைக்காது..!
எதிர்பாராத காரணங்களால் பயிற்சி வகுப்பு நடைபெறவில்லை என்றால் மட்டுமே பதிவு செய்தவர் செலுத்திய வகுப்புக்கான கட்டணம் விகடன் குழுமத்தால் உரிய முறையில் திரும்ப அளிக்கப்படும். குறித்த தேதியில் உங்களால் கலந்துகொள்ள இயலாத நிலையில் பயிற்சிக் கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது.
-
டெக்னிக்கல் ஏரர்...
ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும்போது டெக்னிக்கல் தவறு ஏற்பட்டு தொகை எங்கள் கணக்குக்கு வந்து சேராத நிலையில் பயிற்சிக் கட்டணத்தை நீங்கள் செலுத்திவிட்டதாக எடுத்துக்கொள்ளப்படாது.
-
இரட்டைக் கட்டணம்..!
தவறுதலாக ஒருவர் பெயரில் இரண்டுமுறை பணம் செலுத்திவிட்டதாகக் கூறினால், உரிய முறையில் செக் செய்த பிறகே முடிவு செய்ய முடியும்.
-
ஒன்லி நாலெஜ்..!
நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் அறிவு சார்ந்த தகவலுக்கு மட்டுமே. இதனால் பங்கேற்பாளர்களுக்கு ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு விகடன் குழுமம் பொறுப்பாகாது.
-
உணவு, தங்கும் இடம் உண்டு!
பயிற்சியில் பங்குபெறுபவர்களுக்கு இரண்டு நாள்களுக்கான உணவு, வெள்ளாட்டுப்பால் தேநீர், தங்கும் இடம், நோட்பேட், பேனா, சான்றிதழ் வழங்கப்படும். பதிவு செய்தவர்கள் தங்களுடைய சொந்த செலவில் மைசூரு வந்துவிட வேண்டும். அங்கிருந்து 27-ம் தேதி காலை 8 மணிக்கு பண்ணைக்குச் செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே குறித்த நேரத்திற்குள் மைசூரு வந்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். சொந்த வாகனம் மூலம் பயிற்சி நடக்கும் இடத்துக்கு வர விரும்புபவர்கள் பின்வரும் எண்களில் 99400 72144, 96205 90777 தொடர்புகொண்டு விவரங்களைப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நேரம் முக்கியம்!
வகுப்புக்கு தாமதமாக வருபவர்களுக்கு ஏற்படும் பாட இழப்புக்கு அவர்களே பொறுப்பு.
-
இவருக்குப் பதில் அவர்..!
பதிவு செய்தவர் வர இயலாத சூழலில் அவரைச் சார்ந்த இன்னொருவர் வகுப்பில் கலந்து கொள்வதாக இருப்பின் வகுப்பு நடைபெறுவதற்கு இரண்டு நாள்கள் முன்னதாகவே மெயில் மூலம் முழு விவரங்களையும் தெரிவிப்பது கட்டாயம்.
-
ஒருவர் மட்டுமே..!
ஒருவருக்கு செலுத்திய கட்டணத்தில் ஒருவர் மட்டுமே கலந்துகொள்ள முடியும். குழந்தைகளை உடன் அழைத்துவந்தால் வகுப்பறைக்குள் அனுமதிக்க இயலாது.