பிரம்மரந்தீஸ்வரர் கோயில். திருவாரூர் மாவட்டம், உச்சுவாடி கிராமம்
திருவாரூர் மாவட்டம், வடபாதி மங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த உச்சுவாடி கிராமத்தில் உள்ளது பிரம்மரந்தீஸ்வரர் கோயில். இங்கு அர்ஜுனனும் சகாதேவனும் வழிபட்ட ஈசன், பிரம்மரந்தீஸ்வரர் என்ற பெயரில் தலையில் வடுவோடு காட்சி தருகிறார். இவர் தலைவிதியை மாற்ற வல்ல தேவன் என போற்றப்படுகிறார். இங்குள்ள அழகிய முருகன் கேட்டதைக் கொடுக்கும் பரம தயாளன்.
அன்பார்ந்த வாசகர்களே!
உச்சுவாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீமுருகப்பெருமான் அழகிய வடிவுடன் காட்சி தருகிறான். காலம் அறிய முடியாத இந்த திருமேனி சித்தர்களால் ஸ்தாபிக்கப்பட்டதாம். ஈசனிடம் முருகப்பெருமான் யோகங்கள் குறித்து அறிந்த தலம் என்பதால் இது முக்தி தலமாகவும் போற்றப்படுகின்றது.
கும்பிட்ட கை கீழிறங்கும் முன்னரே கேட்டதைக் கொடுக்கும் இந்த முருகப்பெருமானை வரும் வைகாசி விசாகத்தன்று, முருகப்பெருமான் அவதரித்த 12-6-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று (வளர்பிறை, விசாக நட்சத்திரம்) மாலை 6- 8 மணி வரை, நம் வாசகர்கள் நலம் பெற, ஸ்ரீமஹாஸ்கந்த ஹோமம் நடத்த உள்ளோம். இந்த ஹோமத்தை பிரம்மரந்தீஸ்வரர் கோயில் நிர்வாகமும் உங்கள் சக்தி விகடனும் இணைந்து நடத்த உள்ளோம்.
அன்பர்கள் எல்லோரும் இந்த ஹோமத்தில் சங்கல்பிக்கலாம். வீண் விரயம், காரியத்தடைகள், கடன் பிரச்னைகள் நீங்க வேண்டும் அன்பர்களுக்கு இந்த ஹோமம் ஒரு வரப்பிரசாதம். இந்த ஸ்ரீமஹாஸ்கந்த ஹோமத்தில் சங்கல்பித்துப் பிரார்த்தித்தால் தோஷங்கள் அகன்ற, அச்சமற்ற ஆரோக்கிய வாழ்வை அடைவர் என்பது நிச்சயம்.
அபூர்வ சமித்துக்கள், மலர்கள், மூலிகைகள் கொண்டு நடைபெறும் இந்த ஹோமத்தால் உங்கள் வீட்டில் வளங்கள் யாவும் பெருகும். செவ்வாயின் அதிபதி என்பதால் முருகனின் அருளால் விரயச் செலவுகள் குறையும். கடன் தொல்லை நீங்கும். வியாபார-தொழில் அபிவிருத்தி உண்டாகும். வெற்றி வசமாகும். தீராத நோய்கள் தீரும். மாங்கல்ய பலம், மகப்பேறு, சௌபாக்கிய வாழ்வு, அதிகாரம், பதவி உயர்வு, சொந்த வீடு, வேலை வாய்ப்பு, உறவு சமூகம், செல்வாக்கு, சொல்வாக்கு, வெளிநாட்டு யோகம் என சகல நன்மைகளும் உண்டாகும்.
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ரட்சை + ஹோம பஸ்மம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாதவர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஜூன் 12, 2022 மாலை 3.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.