முனைவர் ப.வெங்கடாச்சலம், பி.எச்.டி
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் உயிர் ஆற்றல் துறையின் முன்னாள் தலைவர், உயிர் ஆற்றல் சம்பந்தமாகத் தீவிரமாக இயங்கி வருபவர். தற்போது திருச்சி மாவட்டம், முசிறியிலிருக்கும் எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராகப் பணியாற்றி வருகிறார். சீமைக்கருவேல மரம் உள்ளிட்ட உயிர் ஆற்றல் மரங்கள் குறித்த ஆராய்ச்சியில் அனுபவம் கொண்டவர்.
திருமிகு வெண்ணிலா தாயுமானவன், நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் மாநிலச் செயலாளர்
பசுமையை நேசிப்பவர். சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பணிகளை முன்னெடுத்து வருகிறார். சூழலுக்கு எதிராக செயல்படும் இடங்களில் குரல் எழுப்பி வரும் களச்செயல்பாட்டாளராகவும் உள்ளார்.
அன்பார்ந்த வாசகர்களே!
‘சீமைக்கருவேல மரம்... ஆபத்தானது. இதை அழிக்காவிட்டால், தமிழகத்தையே பாலைவனமாக்கிவிடும்‘ என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்ட விஷயம், தற்போது, ‘சீமைக்கருவேல மரங்களை எப்போது முழுமையாக அழிக்கப் போகிறீர்கள்?’ என்று தமிழக அரசாங்கத்தை நோக்கிய உயர் நீதிமன்றத்தின் கேள்விக்கனையாக வந்து நிற்கிறது.
‘சீமைக்கருவேல மரங்களின் வேர்கள் நிலத்தினுள் 100 அடிக்குக் கீழ் சென்று நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது. இதனால் நிலத்தடிநீர் குறைகிறது; இத்தகைய சீமைக்கருவேல மரங்களை அழிக்காவிட்டால், தமிழகமே பாலைவனமாக மாறிவிடும்’
-இவையெல்லாம் எப்போதும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள். இவற்றின் உண்மைத் தன்மைதான் என்ன என்று ஆய்வு பூர்வமாக அறிந்து கொள்வதற்காக, பசுமை விகடன் இந்த நேரலை விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
ஜூன் 18, 2022 மதியம் 12.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.