அன்பார்ந்த வாசகர்களே!
நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘ மியூச்சுவல் ஃபண்ட் - முதலீட்டு மந்திரங்கள்!’ என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
ஆண்ட்ராய்டு போனுக்கு...
https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN
-
ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307
-
ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...
நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.
-
"இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்" - ரொம்ப முக்கியம்!
வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாக தேர்ந்தெடுத்துக்-கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் -கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
உடை: செமி-ஃபார்மல் ப்ளீஸ்!
செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-
முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!
பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.