
வெள்ளிமேடுப்பேட்டை ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோயில் திண்டிவனம்
திண்டிவனம் வெள்ளிமேடுபேட்டை என்பது அந்த ஊரின் பெயர். ‘புத்தனந்தல்’ எனும் பழைமையான பெயரும் அந்த ஊருக்கு உண்டு. ஊரின் மையத்தில் அற்புதமாக அமைந்துள்ளது, அன்னை ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீநாகேஸ்வரர் ஆலயம். இது திருமண வரம் அருளும் திருத்தலமாக இருந்து வருகிறது. இந்த ஆலயத்தில் நடைபெறும் பார்வதி சுயம்வர ஹோமத்தால் சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்கிறார்கள்.
அன்பார்ந்த வாசகர்களே!
திண்டிவனம் வந்தவாசி சாலையில் 14 கி.மீ. தொலைவில் வெள்ளிமேடுப்பேட்டை கிராமத்தில் உள்ளது ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோயில். இது திருமண வரம் அளிக்கும் பரிகாரத் தலமாக விளங்கி வருகின்றது. இங்கு நடைபெறும் ஸ்ரீபார்வதி சுயம்வர ஹோமத்தில் கலந்து கொண்டால், நீங்கள் விரும்பிய வண்ணம் வரன் அமையும் என்றும் தம்பதியர் நீண்ட காலம் சௌபாக்கிய வாழ்வை அடைவார்கள் என்றும் கோயில் தலவரலாறு கூறுகின்றது.
சுமார் 2500 ஆண்டுகளைக் கடந்த ஆலயம் இது என்கிறார்கள், ஊர் மக்கள். கருவறையில் ஈசன் சதுர வடிவ ஆவுடையில் அமர்ந்திருக்கும் கோலம் அபூர்வமானது என்கிறார்கள். ‘சதுர ஆவுடை’ எனில், அது பிரம்மன் அமைத்த லிங்கத்திருமேனியாக இருக்கக் கூடும் என்பது பெரியோர்கள் கூற்று. லிங்கத்தின் மீது நாகத்தின் செதில்கள் போன்ற அமைப்பு இருப்பது விசேஷ அம்சம்! ‘இந்த நாகேஸ்வர ஸ்வாமியை வழிபட்டால், நாகதோஷம் உட்பட சகல தோஷங்களும் நீங்கி திருமண வரம் கிட்டும்'’ என்கிறார்கள் பக்தர்கள். ஈசனின் சந்நிதிக்கு அருகில் தெற்கு நோக்கிய சந்நிதியில் திருபுரசுந்தரி அருள்பாலிக்கிறாள்.
திருக்காளத்திக்கும் திருநாகேஸ்வரத்துக்கும் இடையில் அமைந்த மத்திய ராகு - கேது தலமாக வெள்ளிமேடுபேட்டை அமைந்திருப்பதால், இது ராகு - கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. மேலும் ஈசனை (மேற்கு) நோக்கியபடி சனிபகவான் அருள்கிறார். ஆகவே, இது சனிபகவானுக்கு உரிய பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது (திருநள்ளாருக்கும் தெள்ளாறுக்கும் இடையே அமைந்த மத்திய சனீஸ்வரம் என்றும் கூறுகிறார்கள்). இப்படி ஒரே தலம் சனி, ராகு-கேது, சுக்கிரன் என்று பல கிரகங்களுக்கானப் பரிகாரத் தலமாக இருப்பது, வெகு அபூர்வம்!
எனவே நீங்கள் விரும்பிய வரன் அமைய நடைபெறும் இந்த பார்வதி சுயம்வர ஹோமம் வரும் ஜூலை 23-ம் தேதி (2022) ஆடி மாதம் கிருத்திகை நாளில் சனிக்கிழமை அன்று காலை 10.30 முதல் 2 மணி வரை, நம் வாசகர்கள் திருமண வரம் பெற, திருமண வாழ்வில் நலம் பெற நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தை வெள்ளிமேடுப்பேட்டை ஸ்ரீநாகேஸ்வரர் கோயில் நிர்வாகமும் உங்கள் சக்தி விகடனும் இணைந்து நடத்த உள்ளோம். எனவே இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு பலன் பெறுங்கள்!
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் + குங்குமம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாதவர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஜூலை 22, 2022 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.