தே. ஞானசூரிய பகவான் (சாமக்கோடாங்கி சங்கரலிங்கம்)
வேளாண் செய்திகளை வழங்கியவர்களில் பிரபலமானவர் தே. ஞானசூரிய பகவான் (சாமக்கோடாங்கி சங்கரலிங்கம்) . 18 ஆண்டுகள் அகில இந்திய வானொலியில் பணியாற்றி அரசுக்கும், விவசாயிகளுக்கும் பாலமாகத் திகழ்ந்தவர். தற்போது இயற்கை வளங்களைப் பாதுகாத்து, அதன்மூலம் வேளாண் உற்பத்தி, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த விவசாயிகளுக்குப் பயிற்சிக் கொடுத்து வருகிறார். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகேயுள்ள தெக்குப்பட்டுக் கிராமத்தில், பூமி இயற்கை வளங்கள் பாதுகாப்பு மையத்தை நிறுவி, வேளாண்மைத் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வழிகாட்டி வருபவர்.
அன்பார்ந்த வாசகர்களே!
*வானொலி, டி.வி, பத்திரிகை, யூடியூப்... போன்ற தகவல் தொடர்பு சாதனங்களை விவசாயம், கால்நடை வளர்ப்புக்கு பயன்படுத்துக் கொள்ளும் வழிமுறைகள்!
*லாபகரமான விவசாயம் செய்ய எப்படித் தகவல்களைச் சேகரிப்பது?
*குறைந்த செலவில் நிறைவான லாபம் பெற உதவும் ஊடகங்கள்!
*ஊடகம் மூலம் முன்னுக்கு வந்த முன்னோடி விவசாயிகளின் கதை! இன்னும்... இன்னும்...
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
ஜூலை 16, 2022 மாலை 4.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.