ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆஸ்ரமம், சேலம் ஜங்ஷன், ஜாகீர் அம்மாபாளையம்
சேலம் ஜங்ஷன், ஜாகீர் அம்மாபாளையம் அருகே ஸ்ரீவீரமாதுருபுரி ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆஸ்ரமத்தில் இல்லாத தெய்வ சந்நிதிகளே இல்லை எனலாம். இங்கு மட்டுமே 108 லட்சுமியர் தனித்தனி சந்நிதிகளில் அருளுகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு. இங்குள்ள ஸ்ரீதன்வந்திரி பகவான் தனிச்சிறப்பு கொண்டவர் என்கிறார்கள்.
அன்பார்ந்த வாசகர்களே!
சேலம் ஜங்ஷன், ஜாகீர் அம்மாபாளையம் அருகே ஸ்ரீவீரமாதுருபுரியில் அமைந்துள்ளது ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆஸ்ரமம். இங்கு ஸ்ரீவள்ளி தெய்வயானை சமேத ஸ்ரீகாவடி பழனியாண்டவர் முக்கிய மூல தெய்வமாக வீற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி ஸ்ரீசர்வலோகநாயகி சமேத சர்வதோஷ நிவர்த்தீஸ்வரர், ஸ்ரீதீர்த்த பிள்ளையார், ஸ்ரீஅலமேலுமங்கை சமேத ஸ்ரீதிருப்பதி வேங்கடாசலபதி, பக்த ஆஞ்சநேயர், ஸ்ரீதன்வந்திரி பகவான், ஸ்ரீசரபேஸ்வரர், 18 ஐம்பொன் சித்தர்கள், சீரடி சாய்பாபா வரை இங்கில்லாத தெய்வ சந்நிதிகளே இல்லை என வியக்கிறார்கள் பக்தர்கள்.
இந்த ஆஸ்ரமத்தில் சிறப்பினும் சிறப்பாக 108 திருமகள் வடிவங்கள் தனித்தனி சந்நிதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. இதனால் இது செல்வவளம் வழங்கும் அளகாபுரி பட்டினம் என்றும் போற்றப்படுகிறது. செங்கோட சித்தர், சித்தர் பாவாயம்மாள் ஆகியோர் ஆசியால் தொடங்கப்பட்ட இந்த ஆஸ்ரமம், சகல தெய்வ சந்நிதிகளையும் கொடு இருப்பதால் தினம்தோறும் விழாக்களும் ஹோம வைபவங்களும் இங்கு நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன என்பதும் சிறப்பு.
இங்கு தன்வந்திரி ஹோமம் ஏன் நடக்கிறது என்றால், சித்தர்கள் ஆசியினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீதன்வந்திரி பகவான் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதால்தான் எனலாம். மேலும் பழங்கால முறைப்படி ரிஷிகள்; யோகிகள் வகுத்தவாறே அபூர்வ மூலிகைகள் கொண்டு நியமப்படி இங்கு இந்த ஹோமம் நடைபெறுகின்றது. வில்வம், துளசி, அத்தி, நாயுருவி, பலாமரம், அரசம், வன்னி, அருகம்புல், தாமரை, மாதுளை அத்தி, எருக்கன், கருங்காலி, புரசங் குச்சி, நொச்சி உள்ளிட்ட பல அபூர்வ மூலிகைகள் கொண்டு இந்த ஹோமம் செய்யப்படுகிறது.
வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி (2022) ஆவணி மாதம் 4-ம் நாள் தேய்பிறை நவமி ரோஹிணி நட்சத்திர நாளில் சனிக்கிழமை அன்று காலை 10.30 முதல் 12 மணி வரை, நம் வாசகர்கள் பூரண நலமும் நீண்ட ஆயுளும் பெற மஹாதன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தை சேலம் ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆஸ்ரமமும் உங்கள் சக்தி விகடனும் இணைந்து நடத்த உள்ளோம். எனவே இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு பலன் பெறுங்கள்!
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் + குங்குமம்+ ரட்சை) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாதவர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஆகஸ்ட் 19, 2022 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.