ஸ்ரீலட்சுமி குபேரர் ஆலயம் பருத்திபட்டூர், அரக்கோணம்
சென்னையை அடுத்த அரக்கோணம் பருத்திபட்டூரில் எழும்பியுள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீலட்சுமி குபேரர் ஆலயம். அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து 6கி.மீ தொலைவில் இந்த ஆலயமே உள்ளது. இங்கு ஸ்ரீமகாலட்சுமி 84 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஸ்ரீகுபேரரும் அவர் மனைவி சித்ரலேகா அமர்ந்த கோலத்தில் எழுந்தருளி உள்ளார்கள். 3 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ஆலயம் செல்வ விருத்தி தலமாகவும் கடன் நிவர்த்தி தலமாகவும் விளங்கி வருகிறது.
அன்பார்ந்த வாசகர்களே!
இந்த சுபகிருது ஆண்டில் கடந்த இரு ஆண்டுகளில் தொடர்ந்த பொருளாதாரச் சிக்கல்கள் யாவும் தீர்ந்து நன்மைகள் விளையும் என நம்பப்படுகிறது. கடன்கள் தீர்ந்து வியாபார விருத்தி உண்டாகவும், தொழில் வளம், உத்தியோக உயர்வு, உத்தியோகப் பிராப்தி, வெளிநாட்டு யோகம் யாவும் கிடைத்து செல்வவளம் சேரவும் இந்த ஹோமம் வழி வகுக்கும் என்பதில் ஐயம் இல்லை. திருமகளின் அருளாலும் குபேர பகவானின் கடாட்சத்தாலும் உங்கள் வறுமை நீங்கி செல்வச்செழிப்பு உண்டாகும்.
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் + குங்குமம்+ ரட்சை) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாதவர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். செப்டம்பர் 17, 2022 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.