ஞானவேல் கோட்டம் நவசித்தர் பீடம் கிடங்கல் செந்தமிழ்நகர், திண்டிவனம்
திண்டிவனம், கிடங்கல் செந்தமிழ்நகர் ஞானவேல் கோட்டம் நவசித்தர் பீடத்தில் கந்த சஷ்டி தினமான சூரசம்ஹார நாளில் ஸ்ரீசுப்ரமண்ய ஸ்வாமி மஹாஹோமம் நடைபெற உள்ளது. நல்ல உறவுகளையும் அச்சமற்ற வாழ்வையும் அருளும் முருகப்பெருமான் இந்த ஹோமத்தின் வழியே உங்களின் எல்லா பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வைப்பார் என்பது உறுதி!
அன்பார்ந்த வாசகர்களே!
கந்தன் கருணை மிக்க தெய்வம். இவனை ஒருகால் நினைக்கின் மறுகாலும் தோன்றும்; வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும். பகைகளை அழித்த சூரசம்ஹார நாளில் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டால் தீயவற்றிலிருந்தும், எதிரிகளிடம் இருந்தும் விடுபடலாம். தீயகர்ம வினை நீங்கி குடும்ப வாரிசுகள், குடும்ப நல்லுறவுகள் நலம் பெறுவர். வீண் விரயம், கடன்களிலிருந்து விடுபட்டு வளம் பெறலாம்.
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஆராதனையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம் + குங்குமம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறி முறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். அக்டோபர் 29, 2022 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.