அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோயில், இறையானூர், திண்டிவனம்.
திண்டிவனத்துக்கு அருகே சென்னை - விழுப்புரம் தேசிய நெடுஞ் சாலையை ஒட்டியே அமைந்துள்ளது இறையானூர். இங்குஶ்ரீதேவி பூதேவி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் ஶ்ரீஆதிகேசவ பெருமாள். தோன்றிய தொன்மை அறியமுடியாத ஆலயம் என்கிறார்கள்.
அன்பார்ந்த வாசகர்களே!
ஹோமங்களில் தலைசிறந்தது ஸ்ரீசுதர்சன ஹோமம். வாழ்வில் பல நன்மைகளை பெறுவதற்கு நாம் ஸ்ரீசுதர்சன ஹோமம் செய்வது அவசியம். இதன் பலன்கள் ஏராளம். உண்மையான பக்தர்களுக்கு சதாசர்வ காலமும் அபயம் அளிக்கும் ஸ்ரீசுதர்சன சக்கரம், துஷ்டர்களை வதம் செய்யக் கூடியது. பக்தியையும் தர்மத்தையும் நிலை நாட்டும் ஆற்றல், அதர்மத்தின் செருக்கை அடக்கும் வல்லமையைக் கொண்டவர் ஸ்ரீசுதர்சனர்.
அவ்வகையில், இந்த வருடம் சுதர்சனருக்கு உகந்த திருநாளான 20.11.2022 ஞாயிற்றுக் கிழமை அன்று, சக்திவிகடன் - ஆதிகேசவ கோயில் நிர்வாகம் இணைந்து வழங்கும் மகா சுதர்சன ஹோமம், திண்டிவனம் அருகிலுள்ள இறையானூர் ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.
சுதர்சன ஹோம பலன்கள்!
ஶ்ரீசுதர்சன ஹோமம் ஆபத்துகளிலிருந்து நம்மைக் காக்கும்.
பூர்வஜன்ம வினைப் பயனால் சிலர் தீவினைகளுக்கும் தீய சக்திகளின் பாதிப்புகளுக்கும் ஆளாக நேரிடும். இதுபோன்ற பாதிப்புகள் நம்மை அணுகவிடாமல் காக்கும் வல்லமை கொண்டது இந்த ஹோமம்.
மேலும் மகா சுதர்சன ஹோமத்தில் சங்கல்பித்து வழிபடுவதால், எளிதில் கிரஹிக்கும் ஆற்றல் கிடைக்கும், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமாவார்கள். கண்ணுக்குத் தெரியாத நோய்கள் குணமாகும். அத்துடன், சகல சாப தோஷங்களுக்கும் இந்த ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ளலாம். உன்னதமான இந்த ஹோம வைபவத்தில் வாசகர்களும் தங்களுக்காகவும் குடும்பத்தினருக்காகவும் உற்றார் உறவுகளுக்காகவும் சங்கல்பம் செய்து இறையருள் பெறலாம்!
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம் https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். நவம்பர் 19, 2022 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.