ஸ்ரீஐயப்பன் கோயில் பம்மல், சென்னை.
சென்னை பம்மல் ஸ்ரீஐயப்பன்-குருவாயூரப்பன் கோயிலில் மகர ஜோதி ஜனவரி 14 (மார்கழி 30) சனிக்கிழமை அன்று ஸ்ரீஐயப்ப ஆராதனை நடைபெற உள்ளது. காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் தொடங்கி இரவு மகர ஜோதி ஆராதனை வரை பல பிரமாண்ட வழிபாடுகள் நடைபெற உள்ளன. நீண்ட ஆயுளும் நீடித்த ஆரோக்கியமும் நிலையான செல்வமும் வழங்கும் இந்த ஐயப்ப ஆராதனையில் நீங்களும் பங்கு கொள்ள வேண்டுகிறோம்!
அன்பார்ந்த வாசகர்களே!
சென்னையில் ஸ்ரீஐயப்பன் சபரிமலை ஐயனைப் போலவே வீற்றிருக்கும் திருத்தலம் பம்மலில் அமைந்துள்ளது.. மழலை வரம் அருளும் விசேஷத் திருத்தலமான இங்கு மகரஜோதி விழா சிறப்பானது. இந்த ஆண்டு உங்களுக்காக பிரமாண்ட ஏற்பாடுகளுடன் சபரிமலை பிரசாதங்களுடன் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் சங்கல்பித்துக் கொண்டால் சகல வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஆராதனையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஆராதனைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆராதனை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஆராதனை வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு சபரிமலையில் ஸ்ரீஐயப்பனுக்கு அபிஷேகம் செய்த நெய், விபூதி மற்றும் திவ்யரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஆராதனை வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஆராதனை வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஆராதனை வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஜனவரி 13, 2023 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.