ஜி.கார்த்திகேயன் ஆடிட்டர்
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐ) வருமான வரி முதலீடு / வருமான வரி கணக்கு தாக்கல், வீடு, மனை வாங்குதல், நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு போன்றவை குறித்த பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். இவற்றுக்கு விடையளிக்கும் விதமாக நாணயம் விகடன் ‘என்.ஆர்.ஐ - வரி முதல் முதலீடு வரை’ என்கிற தலைப்பில் ஆன்லைன் பயிற்சி வகுப்பு ஒன்றை நடத்துகிறது. இந்தப் பயிற்சி வகுப்பை, என்.ஆர்.ஐகளுக்கு வருமான வரி மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த முன்னணி ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் எடுக்கிறார். இவர் ‘ஜி.எஸ்.டி – ஒரே நாடு, ஒரே வரி’ என்கிற நூலை எழுதி இருக்கிறார். ஆடிட்டிங் பணியில் 30 ஆண்டு க் கால அனுபவம் கொண்டவர்.
அன்பார்ந்த வாசகர்களே!
நாணயம் விகடன் நடத்தும் ‘வளைகுடா & மத்திய கிழக்கு நாடுகள் வாழ் என்.ஆர்.ஐ: வரி முதல் முதலீடு வரை..!’ என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வரத் தவறினால், செலுத்திய கட்டணம் திருப்பித் தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மே 21, 2023 மாலை 6 மணிக்கு (இந்திய நேரம்) பதிவு நிறைவு பெறுகிறது.