மகாசிவராத்திரியில் மகாஆராதனை தென் திருவாலங்காடு, திருமங்கலக்குடி, திருவிடைமருதூர், திருவாவடுதுறை
மகாசிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 18 சனிக்கிழமை அன்று இரவு முழுக்க சிவபெருமானை ஆராதித்து விசேஷ பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. வாழ்வின் அத்தனை செல்வங்களையும் வாரி வழங்கும் சிவராத்திரி நாளில் தென் திருவாலங்காடு, திருமங்கலக்குடி, திருவிடைமருதூர், திருவாவடுதுறை ஆகிய நான்கு பாடல் பெற்ற தலங்களிலும் நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளன.
அன்பார்ந்த வாசகர்களே!
தென் திருவாலங்காடு, திருமங்கலக்குடி, திருவிடைமருதூர், திருவாவடுதுறை ஆகிய நான்கு ஆலயங்களும் விசேஷமானவை என்று அறிந்திருக்கலாம். திருவாவடுதுறை ஆதீனத்துக்குட்பட்ட இந்த ஆலயங்களில் நடைபெற உள்ள சிவராத்திரி பூஜைகளில் சங்கல்பித்துக் கொண்டால் சகல வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. உங்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் யாவும் இந்த பூஜையில் கலந்து கொள்வதால் நிறைவேறும் என்பது நிச்சயம்.
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், பூஜை வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விபூதி மற்றும் திவ்யரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி பூஜை வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, பூஜை வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, பூஜை-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். பிப்ரவரி 18, 2023 மதியம் 12.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.