காரடையான் நோன்பு திருக்கடையூர்
பெண்கள் அனைவரும் செய்ய வேண்டிய வழிபாடு காரடையான் நோன்பு. அம்பிகையின் அருளால் சாவித்திரி, யமனிடம் இருந்து தன் கணவனை மீட்டெடுத்த நாள் மாசியும் பங்குனியும் சேரும் நாள். இந்நாளில் பெண்கள் விரதமிருந்து அம்பிகையை அர்ச்சிக்க மாங்கல்ய வரமும் மாங்கல்ய பலமும் கிட்டும் என்பது ஐதீகம்.
அன்பார்ந்த வாசகர்களே!
உங்கள் காரடையான் நோன்பு சங்கல்பத்தை பூரண ஆயுள் அளிக்கும் திருக்கடவூரில் செய்தால் நீண்ட ஆயுளையும் நீங்காத ஆரோக்கியத்தையும் நிறைவான செல்வத்தையும் பெறுவீர்கள் என்பது நிச்சயம். காலனை தண்டித்த அமிர்தகடேஸ்வரரும் நிலவை வரவைத்து அபிராமி பட்டரைக் காத்த அபிராமி அன்னையும் உங்களின் எல்லா வேண்டுதல்களையும் நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்பது உறுதி!
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், பூஜை வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விபூதி மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி பூஜை வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, பூஜை வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, பூஜை-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். மார்ச் 14, 2023 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.