
நவகிரக மகாஹோமம் அருள்மிகு நவக்கோள் லிங்கேஸ்வரர் ஆலயம், நவம்மாள் காப்பேர், புதுச்சேரி
புதுச்சேரி அடுத்துள்ள கண்டமங்கலம் ஒன்றியம் பங்கூர் அருகே நவம்மாள் காப்பேர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு நவக்கோள் லிங்கேஸ்வரர் ஆலயம். சோழர் காலத்தைச் சேர்ந்த இந்த ஆலயத்தில் நவகிரகங்களும் வழிபட்டு தங்கள் ஆற்றலைப் பெற்றன என்கிறது தலவரலாறு.
அன்பார்ந்த வாசகர்களே!
வைகாசி பௌர்ணமி நாளில் 3-6-2023 அன்று சக்திவிகடனும் நவக்கோள் லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகமும் இணைந்து நவகிரக மகாஹோமம் நடத்த உள்ளது. நவகோள்களும் ஒரே இடத்தில் நின்று வழிபட்ட சிறப்பு மிக்க ஆலயம் என்பதால் இங்கு நவகிரக இடர் களையும் நவகிரக இடரறு வேள்வி சிறப்பானது என்கிறார்கள் பெரியோர்கள். இதில் கலந்து கொண்டால் நவகிரகங்களால் உருவாகும் தோஷங்கள், பாவங்கள் யாவும் தீரும். அதேபோல பக்தர்கள் விரும்பிய அனைத்தையும் ஈசனிடம் வாக்களித்தபடி நவகிரகங்கள் நமக்கு செய்து கொடுக்கும் என்பதும் அதிசய நம்பிக்கை.
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோம பஸ்பம் மற்றும் ரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஜூன் 2, 2023 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.