அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி
சென்னை
அன்பார்ந்த வாசகர்களே!
22-12-2023 வெள்ளிக்கிழமை அன்று மாலை சக்திவிகடனும் பாடி, அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் இணைந்து திருவிளக்கு பூஜை நடத்த உள்ளது. நீங்காத செல்வமும், நிறைந்த ஆரோக்கியமும் நீண்ட வாழ்வும் அருளும் இந்த சந்நிதியில் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டால் உங்கள் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும் என்பது நிச்சயம்.
உங்களது பெயர், முகவரி, தொலைபேசி/ மொபைல் எண் விவரங்களை உடனே பதிவு செய்து கொள்ளுங்கள். போனிலேயே பதிவு எண் தரப்படும்.
பூஜை நடைபெறும் நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே ஆலயத்துக்கு வந்துவிட வேண்டும். பதிவு எண் மற்றும் முகவரி விவரங்களை உறுதி செய்த பிறகே உங்களுக்கான இடம் தரப்படும்.
திருவிளக்கு, விளக்கை வைப்பதற்கேற்ற தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு, தீப்பெட்டி, கத்திரி ஆகியவற்றை மட்டும் நீங்கள் எடுத்து வந்தால் போதும். பூஜைக்கு தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருட்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.
முன்பதிவுக்கு
-
விளக்கு பூஜையில் கலந்துகொள்ள எந்தவித கட்டணமும் கிடையாது. (பதிவு செய்யவேண்டிய நேரம்: காலை 10 முதல் 6 மணி வரை)