ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவ மகாஹோமம் ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆசிரமம், ஜாகீர் அம்மாபாளையம், சேலம்
சேலத்தில் குறைகள் தீர்க்கும் கோயிலாகவும் வியாதிகளை போக்கும் திருத்தலமாகவும் அமைந்துள்ளது முருகனின் ஒன்பதாம் படை வீடான ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆசிரமம். சேலம் ஜங்ஷன், ஸ்டீல் பிளான்ட் சாலையில், ஜாகீர் அம்மாபாளையம் ஸ்ரீ வீரமாதுருபுரியில் அமைந்துள்ள இந்த திருக்கோயில் பல நூறு தெய்வங்களின் சந்நிதிகளைக் கொண்டுள்ளன.
அன்பார்ந்த வாசகர்களே!
ஆனி பௌர்ணமி எனும் குரு பௌர்ணமி நன்னாளில் 3-7-2023 அன்று சக்திவிகடனும் ஸ்ரீ சேலம் காவடி பழனியாண்டவர் ஆசிரமம் ஆலய நிர்வாகமும் இணைந்து ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவ மகாஹோமம் நடத்த உள்ளது. இந்தப் பிரமாண்ட ஆலயத்துக்கான விதையை ஊன்றியவர்கள் அருள்சித்தர் செங்கோட சித்தர், சித்தர் பாவாயம்மாள் ஆகியோர். சகல தெய்வங்களும் குடிகொண்டிருக்கும் இந்தத் தலத்தில் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவ மகாஹோமத்தில் கலந்து கொண்டால் உங்கள் பிள்ளைகளின் கல்வியும் ஞானமும் மேம்படும். விரும்பிய பாடப் பிரிவில் சேரவும், விரும்பிய வேலையில் பணியாற்றவும் உதவும் என்பது நம்பிக்கை.
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோம பஸ்பம் மற்றும் ரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஜூலை 2, 2023 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.