ஆடிப்பூரத்தில் நவாக்ஷரி மஹாஹோமம் ஸ்ரீலலிதா மகாதிரிபுரசுந்தரி ஆலயம், கிளாம்பாக்கம், ஆவடி
ஆவடி அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ளது ஸ்ரீலலிதா மகாதிரிபுரசுந்தரி ஆலயம். எண்ணம், வாக்கு, எழுத்து எதிலும் அடங்காத பேராற்றல் கொண்ட ஸ்ரீலலிதா பரமேஸ்வரி எழுந்தருளி உள்ள சிறந்த பரிகாரத் தலம் இது.
அன்பார்ந்த வாசகர்களே!
அம்மனுக்கு உரிய ஆடிப்பூர நன்னாளில் 22-7-2023 அன்று சக்திவிகடனும் ஸ்ரீலலிதா மகாதிரிபுரசுந்தரி ஆலய நிர்வாகமும் இணைந்து நவாக்ஷரி மஹாஹோமம் நடத்த உள்ளது. அம்பிகையின் திருவடிவங்களில் 'ஸ்ரீலலிதா' சகல சௌபாக்கியங்களும் அருளக் கூடிய வடிவம் என்கிறார்கள் பெரியோர்கள். ஸ்ரீலலிதாவைப் போற்றும் வழிபாடுகளில் உயர்வானது நவாக்ஷரி மஹாஹோமம். கொண்டால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். குறிப்பாக குழந்தைப்பேறு, தோஷ நிவர்த்தி, ஐஸ்வரியம் பெருகுதல், உத்தியோக-வியாபார அபிவிருத்தி, ஆனந்தமான இல்லற வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோம பஸ்பம் மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஜூலை 21, 2023 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.