ஆயுஷ் ஹோமம் ஸ்ரீநாகேஸ்வரர் ஆலயம், வெள்ளிமேடுப்பேட்டை
திண்டிவனத்திலிருந்து வந்தவாசி செல்லும் வழியில் 14 கி.மீ. தொலைவில் வெள்ளிமேடுப்பேட்டை ஸ்ரீநாகேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு திருமகள், சுக்கிரன், அகத்தியர், நாகராஜன் வழிபட்டு பலன் பெற்றிருக்கிறார்கள். இதனால் இத்தலம் செல்வவளம், சுக்கிர யோகம், நாகதோஷ நிவர்த்தி, ஆரோக்கியம் அருளும் தலமாக உள்ளது. ஆயுள் பலத்தை அதிகரிக்கும் இந்த ஆலயத்தில் ஆயுஷ் ஹோமம் நடத்துவது சிறப்பானது என்கிறார்கள் பெரியோர்கள். இந்த அற்புதமான வழிபாட்டில் நீங்களும் சங்கல்பிக்கலாம்!
அன்பார்ந்த வாசகர்களே!
ஆவணி வளர்பிறை துவிதியை சுப முகூர்த்த நாளில் 17-9-2023 அன்று சக்திவிகடனும் வெள்ளிமேடுப்பேட்டை ஸ்ரீநாகேஸ்வரர் ஆலய நிர்வாகமும் இணைந்து ஆயுஷ் ஹோமம் நடத்த உள்ளது. இங்குள்ள ஈசன் அஷ்ட நாகங்களுக்கும் சிரஞ்சீவி வாழ்வை அருளியவர். அதற்கு சான்றாக இங்குள்ள சுவாமியின் லிங்கத்திருமேனி மீது நாகத்தின் செதில்கள் போன்ற அமைப்பு இருப்பது விசேஷ அம்சம். நீண்ட வாழ்வை அருளும் இந்த ஈசனின் சந்நிதியில் ஆயுஷ் ஹோமம் செய்துகொண்டால் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் நீங்காத ஆரோக்கியமும் கிட்டும் என்பது ஐதீகம்.
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோம பஸ்பம், மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். செப்டம்பர் 16, 2023 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.