உமாமஹேஸ்வர ஹோமம் சித்தர் அம்மணி அம்மன் கோயில், திருவண்ணாமலை
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் சிவனே மலையாக காட்சி தருவதாகவும், திருக்கார்த்திகை தீபத் திருநாள் அன்று ஜோதி வடிவாக காட்சி தருவதாகவும் ஐதீகம். 2023-ம் ஆண்டிற்கான திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் நவம்பர் 26-ம் தேதி ஏற்றப்பட உள்ளது. இந்த நன்னாளில் உங்கள் குடும்பம் சிறக்கவும் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறவும் ஈசான்ய லிங்கத்துக்கு எதிரே உள்ள சித்தர் அம்மணி அம்மன் கோயிலில் உமாமஹேஸ்வர ஹோமம், ருத்ராட்ச அபிஷேகம், தீப வழிபாடுகள் நடைபெற உள்ளன. இந்த அற்புதமான வழிபாட்டில் நீங்களும் சங்கல்பிக்கலாம்!
அன்பார்ந்த வாசகர்களே!
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப நன்னாள் அன்று சக்திவிகடனும் திருவண்ணாமலை அம்மணி அம்மன் ஆலய நிர்வாகமும் இணைந்து உமாமஹேஸ்வர ஹோமம், ருத்ராட்ச அபிஷேகம், தீப வழிபாடுகள் நடத்த உள்ளது. அண்ணாமலையாரின் பக்தையாக விளங்கி எண்ணற்ற அதிசயங்களை செய்தவர் அம்மணி அம்மன். தனித்து ஒருவராக நின்று திருவண்ணாமலை வடக்குக் கோபுரத்தை கட்டியவர் இவர். இவரை வணங்கி இன்றும் துயர் நீங்கும் பக்தர்கள் அநேகம். இந்த ஆலயத்தில் நடைபெறும் கார்த்திகை தீப வழிபாடுகளில் பங்கு கொண்டால் மங்கல வாழ்வும் நிறைந்த செல்வமும் நீங்காத ஆரோக்கியமும் கிட்டும் என்பது ஐதீகம்.
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோம பஸ்பம், மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.