நிகும்பலா யாகம் வீரபத்திரர் ஆலயம் கும்பகோணம் அடுத்த தாராசுரம்
ஒட்டக்கூத்தரும் ரவணச்சித்தரும் வழிபட்டு ஜீவசமாதி அடைந்த வீரபத்திரர் ஆலயம் கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் அமைந்துள்ளது. தக்கயாக பரணி எழுதிய ஒட்டக்கூத்தருக்கு சிரித்த கோலத்தில் வீரபத்திரரும் பத்ரகாளியும் அருள் காட்சி கொடுத்த தலமிது. அக்கமாதேவியார் தவமிருந்த பூமியிது. இங்கு நடத்தப்படும் உக்கிரமான நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டால் தீமைகள் விலகி நன்மைகள் நடக்கும் என்பது நம்பிக்கை.
அன்பார்ந்த வாசகர்களே!
கார்த்திகை அமாவாசை நாளில் (12-12-2023 - செவ்வாய்க்கிழமை) சக்திவிகடனும் தாராசுரம் வீரபத்திரர் ஆலய நிர்வாகமும் இணைந்து நிகும்பலா யாகம் நடத்தவுள்ளோம். பத்ரகாளியும் வீரபத்திரரும் தட்சனின் யாகத்தை அழித்து, தட்சனை ஒழித்து இங்கே வந்து கோயில் கொண்டனர் என்கிறது தலவரலாறு. இங்கு வந்தால் சகல அச்சங்களும் நீங்கி, எதிரிகள் விலகியோட நன்மைகள் உண்டாகும் என்கிறார்கள். அதோடு அமாவாசை இரவில் நடைபெறும் நிகும்பலா ஹோமத்தில் கலந்து கொண்டால் மங்கல வாழ்வும் நிறைந்த செல்வமும் நீங்காத ஆரோக்கியமும் கிட்டும் என்பது ஐதீகம்.
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ருத்ராட்சம், ஹோம பஸ்பம், மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.